புதுடில்லி. டிச.26 அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் புதிய பொறுப்பாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
2024 ஆம் ஆண்டு நாடாளு மன்ற தேர்தல் வர உள்ள நிலை யில் பல்வேறு மாநில பொறுப் பாளர்கள் நியமனம் குறித்து காங்கிரஸ் கட்சியின் செயற்குழுக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.
இந்த நிலையில் புதிய பொறுப்பாளர்கள் நியமனம் குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது.
காங்கிரஸ் கட்சியின் தமிழ் நாடு பொறுப்பாளராக ஜார் கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த மேனாள் மக்களவை உறுப்பினர். டாக்டர் அஜோய் குமார் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் ஏற்கெனவே ஒடிசா மாநில பொறுப்பாளராக உள்ள நிலை யில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மாநில பொறுப்பை கூடுதலாக கவனிக்க உள்ளது குறிப்பிடத் தக்கது.