பாட்னா, டிச.26 ‘இண்டியா’ கூட் டணியில் நான் எந்த பதவியையும் விரும்பவில்லை. பிரதமர் வேட் பாளராக கார்கேவின் பெயர் முன்மொழியப்பட்டதில் எனக்கு எந்த வருத்தமும் இல்லை’’ என்று பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார் தெரிவித்துள்ளார்.
மக்களவை தேர்தலை முன் னிட்டு எதிர்க்கட்சிகள் ஒன்றி ணைந்து ‘இண்டியா’ கூட்டணியை உருவாக்கியுள்ளன. இதில் காங் கிரஸ், சமாஜ்வாதி, திமுக, திரிண மூல் காங்கிரஸ், அய்க்கிய ஜனதா தளம், ஆம் ஆத்மி, தேசியவாத காங்கிரஸ், சிவசேனாவின் உத்தவ் தாக்கரே பிரிவு, மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் உள்ளிட்ட 28 கட்சிகள் இடம்பெற்றுள்ளன.
‘இண்டியா’ கூட்டணியின் பிரதமர் வேட்பாளராக தங்களது பெயர் முன்னிலைப்படுத்தப்பட வேண்டும் என்று பீகார் முதல மைச்சர் நிதிஷ் குமார், மேற்குவங்க முதலமைச்சர் மம்தா உள்ளிட் டோர் விரும்புவதாக கூறப்படுகிறது. இந்த சூழலில், டில்லியில் கடந்த 19ஆ-ம்தேதி நடந்த ‘இண்டியா’ கூட்டணி ஆலோசனைக் கூட்டத் தில், காங்கிரஸ் தலைவர் மல்லி கார்ஜுன கார்கேவை பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்தலாம் என்று திரிணமூல், ஆம் ஆத்மி ஆகிய கட்சிகள் பரிந்துரை செய்தன. இதை பல கட்சிகள் ஆமோதித்தன. இதன் காரணமாக நிதிஷ் குமார் கடும் அதிருப்தி அடைந்ததாக கூறப்படுகிறது. இதை உறுதி செய்யும் வகையில் அய்க்கிய ஜனதா தள மூத்த தலைவர்கள், கார்கேவை கடுமையாக விமர்சித்தனர்.
இதுதொடர்பாக காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி சில நாட்களுக்கு முன்பு நிதிஷ் குமா ரிடம் தொலைபேசியில் பேசினார். அப்போது பிரதமர் வேட்பாளர் விவகாரம் குறித்து இருவரும் ஆலோசித்ததாக தகவல்கள் வெளியாகின. இந்த சூழலில், மேனாள் பிரதமர் வாஜ்பாய் பிறந்த நாளையொட்டி, பீகார் தலைநகர் பாட்னாவில் நிதிஷ் குமார் மரி யாதை செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:
மறைந்த தலைவர் வாஜ்பாயை மிகவும் மதிக்கிறேன். எனது வாழ்நாள் முழுவதும் அவருக்கு மரியாதை செய்வேன். ‘இண்டியா’ கூட்டணி ஆலோசனைக் கூட்டத் தில் பிரதமர் வேட்பாளராக கார்கே பெயர் முன்மொழியப் பட்டதில் எனக்கு எந்த வருத்தமும் கிடையாது. ‘இண்டியா’ கூட்டணி யில் நான் எந்த பதவியையும் விரும்பவில்லை. கூட்டணியில் தொகுதி பங்கீட்டை விரைந்து முடிக்க வேண்டும் என்பதே எனது விருப்பம். அய்க்கிய ஜனதா தளத் தில் விரிசல் ஏற்பட்டிருப்பதாக சிலர் (பாஜக தலைவர்கள்) கூறுவ தில் உண்மை இல்லை. ‘இண்டியா’ கூட்டணியிலும் எவ்வித விரிசலும் இல்லை. இவ்வாறு அவர் கூறினார்.