தமிழர் தலைவருக்கு பிரச்சார ஊர்தி வழங்குவதற்கு பெரும் பணியாற்றிய பெரியார் வீர விளையாட்டுக் கழகத் தலைவர் பேராசிரியர்
ப. சுப்பரமணியன், ஊர்தியை சிறப்பாக வடிவமைத்ததற்கு காரணமாக இருந்த பொறியாளர்கள்
அ. கபிலன், ஏ. சிற்றரசு, ஆகியோருக்கு விழா மேடையில் தமிழ்நாடு நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் கே.என். நேரு பொன்னாடை அணிவித்து பாராட்டுகளை தெரிவித்தார்.
தமிழர் தலைவரின் பிரச்சார ஊர்தியை பல ஆண்டுகளாக சிறப்பாக இயக்கி வரும் ஓட்டுநர் தமிழ்ச்செல்வன், தமிழர் தலைவருடன் பிரச்சார பயணத்தில் தொடர்ந்து பங்காற்றி வரும் தோழர்கள் பா. சிவகுமார், என்னாரெசு பிராட்லா ஆகியோருக்கு தமிழ்நாடு நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் கே.என். நேரு பொன்னாடை அணிவித்து பாராட்டுகளை தெரிவித்தார். மேடையில்: தமிழர் தலைவருடன் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ். அழகிரி மற்றும் சிறப்பு விருந்தினர்கள் உள்ளனர். (20.10.2023)
ஈரோட்டுப் பாதையில் தொடர் பயணம் – தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களுக்கு பிரச்சார ஊர்தி வழங்கும் விழாவில் பங்கேற்றோர் (திருச்சி -20.10.2023)