♦தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி எழுதிய ‘உலகத் தலைவர் பெரியார் வாழ்க்கை வரலாறு (தொகுதி – 8)’ புத்தகத்தை தி.மு.க. மாநிலங்களவை உறுப்பினர் புதுகை எம்.எம். அப்துல்லா வெளியிட பேராசிரியர் சுப.வீரபாண்டியன் பெற்றுக் கொண்டார்.
♦தந்தை பெரியார் நினைவிடத்தில் ஆந்திரா, தெலங்கானாவைச் சேர்ந்த மூடநம்பிக்கை நிர்மூலன் சமிதி அமைப்பின் தலைவர் முனைவர் பைரி நரேஷ் தலைமை யில் பெருந்திரளான தோழர்கள் பங்கேற்று மரியாதை செலுத்தினர்.
♦ தந்தை பெரியாரின் 50ஆம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு, பெரியார் நெடுஞ்சாலையில் உள்ள அன்னை மணியம்மையார் சிலைக்கு தமிழர் தலைவர் ஆசிரியர்
கி. வீரமணி அவர்களின் தலைமையில், துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன், பொதுச் செயலாளர் வீ. அன்புராஜ், பொருளாளர் வீ. குமரேசன், துணைப் பொதுச் செயலாளர்கள் ச. பிரின்சு என்னாரெசு பெரியார், ச. இன்பக்கனி ஆகியோர் முன்னிலையில், திராவிடர் கழக மகளிரணித் தோழர்கள் சூழ மாலையிட்டு மரியாதை செய்யப்பட்டது. முன்னதாக அண்ணாசாலை சிம்சன் அருகிலுள்ள தந்தை பெரியார் சிலையிலிருந்து அமைதி ஊர்வலம் புறப் பட்டது. ஊர்வலம் சிந்தாதிரிப்பேட்டை காவல் நிலையம் தாண்டி, நீதிக்கட்சித் தலைவர்களுள் ஒருவரான சுந்தராவ் (நாயுடு) சிலையைச் சுற்றி வந்து, காந்தி இர்வின் பாலம் வழியாக பெரியார் நெடுஞ்சாலை ஈ.வெ.கி. சம்பத் சாலை வழியாக ஊர்வலம் பெரியார் திடல் வந்தடைந்தது. ஊர்வலம் சுமார் ஒரு கிலோ மீட்டருக்கும் மேல் நீண்டிருந்தது. இதில் தெலங்கானவைச் சேர்ந்த ஏராளமான தோழர்கள் கலந்து கொண்டது குறிப்பிடத் தக்கது.