புதுடெல்லி, டிச. 23- நாடாளுமன்ற வளாக பாதுகாப்பு, மத்திய படை யான மத்திய தொழிலக பாதுகாப்பு படையிடம் ஒப்படைக்கப்பட்டு இருப்பதாக ஒன்றிய அரசு வட் டாரங்கள் தெரிவித்தன.
இப்படை, விமான நிலையங்கள் மற்றும் ஒன் றிய அரசு கட்டடங்களுக்கு பாதுகாப்பு அளித்து வருகிறது.பழைய மற்றும் புதிய நாடாளுமன்ற வளாகங்களில் ஆட்களை உள்ளே அனுமதிப்பதில் விமான நிலைய பாணியை கடைப்பிடிக்க மத்திய தொழிலக பாதுகாப்பு படை திட்டமிட்டுள் ளது. கையடக்க ‘டிடெக் டர்’ உதவியுடன் ஆட்கள் சோதனையிடப்படுவார்கள். அவர்களது உடை மைகள் ‘எக்ஸ்ரே’ எந்தி ரங்கள் மூலம் பரிசோதிக் கப்படும். காலணி, கோட்டு, பெல்ட் ஆகியவை ‘ஸ்கே னர்’ எந்திரத்தின் வழி யாக அனுப்பப்பட்டு பரி சோதிக்கப்படும்.
நாடாளுமன்ற அத்து மீறல் தொடர்பாக, கரு நாடகாவை சேர்ந்த சாய் கிருஷ்ணா ஜகாலி, உத் தரப்பிரதேசத்தை சேர்ந்த ஒருவர் ஆகிய மேலும் 2 பேரிடம் காவல்துறையி னர் விசாரணை நடத்தினர்.
குதிரை காணாமல் போனபின் லாயத்தை இழுத்துப் பூட்டுவதா? நாடாளுமன்ற பாதுகாப்பு மத்திய படையிடம் ஒப்படைப்பாம்
Leave a Comment