நாடாளுமன்றம் உள்பட எங்குமே பாதுகாப்பு இல்லை பிஜேபி ஆட்சியின் மீது பிரியங்கா குற்றச்சாட்டு

viduthalai
1 Min Read

புதுடில்லி, டிச. 23- மணிப்பூர் மாநிலத்தில் மெய்தி மற்றும் குகி மக்களுக்கு இடையே 8 மாதங்களாக கலவரம் நடந்து வரு கிறது. இந்த கலவரத்தில் கொல்லப்பட்ட குகி இனத்தை சேர்ந்த 87 பேரின் உடல்கள் 20.12.2023 அன்று சுராசந்த் பூர் மாவட்டத்தில் மொத்த மாக ஒரே இடத்தில் அடக்கம் செய்யப்பட் டன. இந்த நிலையில் காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் பிரி யங்கா காந்தி மணிப்பூர் விவகாரத்தை குறிப்பிட்டு பா.ஜனதா அரசை கடு மையாக விமர்சித்து உள்ளார்.

இது குறித்து அவர் எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “மணிப்பூர் வன்முறையில் கொல்லப்பட்ட மக்கள் 8 மாதங்களுக்கு பிறகு அடக்கம் செய்யப்பட் டார்கள் என்பது, கற்பனை செய்துகூட பார்க்க முடி யாத கொடூரம். மணிப்பூ ரின் பாதுகாப்பு தொடர் பாக நாடாளுமன்றத்தில் கேள்விகள் கேட்கப் பட்டபோது, பிரதமர் மோடியின் அரசு பொறுப்பேற்காமல் பொருத்தமற்ற பதில் களை அளித்தது.

இப்போது அவர் (பிர தமர்) அமர்ந்திருக்கும் நாடாளுமன்றம் கூட இனி பாதுகாப்பாக இல்லை. ஆனால் அது பற்றி கேள்விகள் கேட்டதால் சுமார் 150 எம்.பி.க்கள் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். பா.ஜனதா ஆட்சி யில் நாடாளுமன்றம், எல்லைகள், சாலைகள், சமூகம் எதுவும் பாதுகாப் பாக இல்லை” என குறிப்பிட்டுள்ளார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *