நாடாளுமன்ற எம்.பி.க்கள் இடைநீக்கம் கோடிக்கணக்கான மக்களின் குரலை ஒன்றிய பிஜேபி அரசு நசுக்குவதா? ராகுல் காந்தி கேள்வி

2 Min Read
வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

புதுடில்லி, டிச. 23- 146 எம்.பி.க் கள் இடைநீக்கம் செய்யப் பட்டதைக் கண்டித்து இண்டியா கூட்டணி நேற்று (22.12.2023) டில்லி ஜந்தர் மந்தரில் போராட் டம் நடத்தியது.
இந்தக் கூட்டத்தில் ராகுல்பேசுகையில், ‘‘ஒன் றிய அரசு எம்.பி.க்களை மட்டும் நீக்கவில்லை. அவர்களைத் தேர்ந்தெ டுத்த மக்களின் குரலை நசுக்கிஇருக்கிறது” என்று விமர்சித்தார். மக்கள வைக்குள் இருவர், வண் ணப் புகைக் குப்பிகளுடன் நுழைந்திருக்கிறார்கள் என்றால்,அவர்களால் வேறு பொருட்களையும் கொண்டு வந்திருக்கமுடி யும் என்று குறிப்பிட்ட அவர், பிரதமர் மோடி தலைமையிலான பாஜக அரசு வேலைவாய்ப்பு களை உருவாக்கவில்லை, இதனால்தான் இது போன்ற நிகழ்வுகள் அரங் கேறுகின்றன என்று இந்தியாவின் வேலையின் மையை சுட்டிக்காட்டிப் பேசினார்.

மேலும் அவர் கூறு கையில், “தாங்கள்தான் தேச பக்தியாளர்கள் என்று கூறும் பாஜக எம்.பி.க்கள் இந்த நிகழ் வின்போது அவையை விட்டு ஓடிவிட்டனர். ஊடகத்தை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்து விடலாம் என்றும் அதானிக்கு நாட்டின் சொத்தை தாரைவார்த்து விடலாம் என்றும் பாஜக அரசு நினைத்துக் கொண்டி ருக்கிறது. பாஜக அரசுட னான எங்கள் மோதல், அன்புக்கும் வெறுப்புக் கும் இடையிலான மோதல்” என்று தெரிவித்தார்.
டிசம்பர் 13-ஆம் தேதி மக்களவையில் பார்வை யாளராக வந்திருந்த இரு வர், திடீரென்று மக்க ளவை உறுப்பினர்கள் அமர்ந்திருந்த பகுதியை நோக்கி ஓடி, வண்ணப் புகைக் குப்பியை வீசினர். அதேபோல், நாடாளு மன்ற வளாகத்தில் இரு வர் வண்ணப் புகைக் குப்பிகளை வீசி அரசுக்கு எதிராக முழக்கம் எழுப் பினர்.
நாடாளுமன்ற தீவிரவாத தாக்குதலின் 22ஆ-வது நினைவு நாளன்று நடந்த இந்த நிகழ்வு நாடு முழு வதும் பெரும் அதிர்ச்சியை ஏற் படுத்தியது. இந்தப் பாது காப்பு குறை பாட்டுக்கு உள்துறை அமைச்சர் அமித் ஷா உரிய விளக்கம் அளிக்க வேண்டும் என்று எதிர்க் கட்சி எம்.பி.க்கள் நாடா ளுமன்றத்தில் அமளியில் ஈடுபட்டனர்.
இதையெடுத்து 146 எம்.பி.க்கள் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். நாடாளுமன்ற வரலாற் றில் அதிக எம்.பி.க்கள் இடைநீக்கம் செய்யப்படு வது இதுவே முதல்முறை ஆகும்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *