தூத்துக்குடி. டிச.23- பொது இடங்களுக்கு செல்லும்போது முதியவர்கள், நோயாளிகள் கட் டாயம் முக்கவசம் அணிய வேண்டும் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் கேட்டுக் கொண்டுள்ளார்.
தூத்துக்குடியில் மழை வெள் ளத்தால் பாதிக்கப் பட்ட மக் களுக்காக ஸ்மார்ட் ‘சிட்டி பேருந்து நிலையம், குறிஞ்சி நகர், பூந்தம்புலி, போடம்மாள் புரம், சுப்பிரமணியபுரம், ஏரல், ஆழ்வார்திருநகரி, சிறீவைகுண் டம் உள்பட இடங்களில் தமிழ் நாடு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் சிறப்பு மருத்துவ முகாம்கள் நடைபெற்று வருகிறது.
இந்த முகாம்களை அமைச் சர் மா.சுப்பிரமணியன் நேற்று (22.12.2023) ஆய்வு செய்தார்.
அப்போது செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:-
தூத்துக்குடி மாவட்டத்தில் வேலம்மாள் மருத்துவமனை, அப்பல்லோ மருத்துவமனை, மதுரை மீனாட்சி மிஷன் மருத் துவமனை, வடமலையான் மருத்துவமனை ஆகிய 4 தனி யார் மருத்துவமனைகள் இணைந்து 50 மெகா சிறப்பு மருத்துவ முகாம் களை 24ஆம் தேதி (நாளை) நடத்துகிறது.
இதனை பொதுமக்கள் பயன் படுத்திக் கொள்ள வேண்டும். மேலும் தூத்துக்குடி, நெல்லை, தென்காசி, கன்னியாகுமரி ஆகிய 4 மாவட்டங்களில் பிர தான குடிநீர் இணைப்பு குழாய் கள் துண்டிக்கப்பட்டுள்ள கார ணத்தினால், பொதுமக்கள் தாங்கள் பயன்படுத்தும் நீரை காய்ச்சி பருகினால், டைபாய்டு போன்ற நோய் பாதிப்புகளில் இருந்து பாதுகாத்துக் கொள்ள முடியும்.
இதனை பொதுமக்கள் தவறாமல் பின்பற்ற வேண்டும்.
கரோனா பாதிப்பு கடந்த 6 மாதங்களாக ஒற்றை இலக்கத் தில் இருந்த கரோனா பாதிப்பு, தற்போது சிங்கப்பூரில் 4 ஆயிரம் என்ற எண்ணிக்கையிலும், அண்டை மாநிலமான கேரளா வில் 300 என்ற எண்ணிக்கையிலும் பரவ தொடங்கியுள்ளது.
முதலமைச்சரின் அறிவுறுத்த லின்படி, கண்காணிப்பு நட வடிக்கைகள் மேற்கொள்ளப் பட்டது.
சிங்கப்பூர் மருத்துவர்க ளுடன் துறையின் சார்பில் ஆலோசிக்கப்பட்டதில், பெரும் பாலானவர்களுக்கு இருமல் மற் றும் தொண்டை வலி போன்ற பாதிப்புகள் ஏற்படுகிறது. 3 நாட்களில் சரியாகிவிடுகிறது என்று தெரிவித்துள்ளனர்.
தமிழ்நாட்டை பொறுத்த வரையில் நேற்றைக்கு (நேற்று முன்தினம்) 23 பேர் கரோ னாவினால் பாதிக்கப்பட் டுள்ளனர்.”
அவர்களுக்கு உரிய சிகிச் சைகள் வழங்கப்பட்டு தற் போது நலமாக உள்ளனர்.
மேலும், கர்ப்பிணித் தாய் மார்கள், வயது முதிர்ந்தவர்கள். இணை நோய் உள்ளவர்கள் பொது இடங்களுக்கு செல்லும் போது முகக்கவசங்கள் கட்டா யம் அணிந்து கொண்டு செல்ல வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
அப்போது மருத்துவம் மற் றும் மக்கள் நல்வாழ்வுத்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் ககன்தீப் சிங் பேடி, பொது சுகா தாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துத்துறை இயக்குநர் மருத் துவர் செல்வவிநாயகம், மருத்து வக் கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்குநர் மருத்துவர் சங்குமணி, தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர் மருத்துவர் சிவகுமார் உள்ளிட்டோர் உட னிருந்தனர்.