தூத்துக்குடி,டிச.23– நெல்லை, தூத்துக் குடி மாவட்டங்களில் கடந்த 16ஆம் தேதி முதல் 3 நாட்கள் கொட்டித்தீர்த்த கனமழையால் தாமிரபரணி ஆற்றின் இரு கரைகளையும் கடந்து வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. வீடுகளையும், விளைநிலங்களையும் மூழ்கடித்து வர லாறு காணாத பேரழிவை ஏற்படுத்தி கோரத்தாண்டவம் ஆடியது. ஏராள மானவர்களின் வீடுகள், உடைமைகளை சேதப்படுத்தி நிர்க்கதியாக்கியது.
வெள்ளத்தில் சிக்கிய பலரின் உயி ரையும் பறித்து தீராத ரணத்தை ஏற்ப டுத்தியது. பெருவெள்ளத்தில் ஆற்றங் கரையோர சாலைகள், கோவில்கள், அரசு அலுவலகங்களும் மூழ்கி பேரிழப்பை ஏற்படுத்தியது.
சிறீவைகுண்டம் அருகே ஆதிச்சநல் லூரில் ஒன்றிய அரசின் சார்பில் ரூ.5 கோடியில் உலகத்தரம் வாய்ந்த அருங் காட்சியகம் அமைக்கப்படுகிறது.
அங்கு முதல்கட்டமாக அகழாய்வு நடைபெற்ற இடத்தில் கண்ணாடி இழை பதித்து மாதிரி சைட் மியூசியம் அமைக்கப்பட்டு திறக்கப்பட்டது.
தாமிரபரணி ஆற்றங்கரையில் மேடான பரும்பு பகுதியில் அமைந்துள்ள ஆதிச்சநல் லூர் அருங்காட்சியகமும் பெருவெள் ளத்தின் கோரப்பிடியில் தப்பவில்லை. அங்குள்ள அகழாய்வு குழிகளை மூழ் கடித்த பெருவெள்ளம் முதுமக்கள் தாழி உள்ளிட்ட பழங்கால தொல் பொருட்களையும் உடைத்து சேதப் படுத்தியது.
முதுமக்கள் தாழி தகவல் மய்யத் தையும் வெள்ளம் சூழ்ந்துள்ளது. அருங்காட்சியகத்தை சுற்றி அமைக்கப் பட்ட சுற்றுச்சுவரையும் சேதப்படுத்தி யது. தற்போது வெள்ளம் சற்று தணிந்த நிலையில் அருங்காட்சியகத்தை சீர மைக்கும் பணியில் ஊழியர்கள் மும் முரமாக ஈடுபட்டுள்ளனர். அகழாய்வு குழியில் தேங்கிய தண்ணீரை மோட் டார் மூலம் வெளியேற்றினர்.
இதுகுறித்து தொல்லியல் ஆர்வலர் முத்தாலங்குறிச்சி காமராசு கூறுகை யில், “சேதமடைந்த தொல்லியல் பொருட்களை முறையாக பாதுகாக்க வேண்டும். சைட் மியூசியத்தை விரை வில் சீரமைத்து மீண்டும் பொதுமக்கள், மாணவ-மாணவிகளின் பார்வைக்கு திறக்க வேண்டும்.
எதிர்காலத்தில் பேரிடரால் சேத மடையாத வகையில் அருங்காட்சி யகத்தை நவீன முறையில் அமைக்க வேண்டும்” என்றார்.