தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் நேற்று (21.12.2023) அதி கனமழையால் மிகக் கடுமையாக பாதிக்கப்பட்ட தூத்துக்குடிக்கு நேரில் சென்று, எட்டையபுரம் 3ஆவது கேட் மேம்பாலத்திலிருந்து வெள்ளம் சூழ்ந்த பகுதிகளை பார்வையிட்டு, வெள்ள நீரை அகற்றிட துரித நடவடிக்கை மேற்கொள்ளுமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். உடன் நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு, சமூக நலன் – மகளிர் உரிமைத் துறை அமைச்சர் பி.கீதா ஜீவன், நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி, மேயர் என்.பி.ஜெகன் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் உள்ளனர்.
அதி கனமழையால் மிகக் கடுமையாக பாதிக்கப்பட்ட தூத்துக்குடியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
Leave a Comment