ஒசூர்,டிச.21- ஒசூர் மாவட்ட திராவிடர் கழகம் சார்பில் தந்தை பெரியாரின் இறுதி முழக்கம் 50ஆம் ஆண்டு நினைவு விளக்க பொதுக் கூட்டம் மாவட்ட தலைவர் சு.வனவேந்தன் தலை மையில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் கழக பேச் சாளர் என்னொரெசு பிராட்லா தந்தை பெரியார் இறுதியாக சென்னை தியாகராயர் நகரில் உரையாற்றிய உரையை நினைவு படுத்தி சிறப்புரையாற்றினார்.
இந்நிகழ்ச்சியில் மாநில மக ளிரணி செயலாளர் தகடூர் தமிழ் செல்வி, தலைமைக் கழக அமைப் பாளர் திராவிடமணி,மாவட்ட செயலாளர் சின்னசாமி,காங்கிரஸ் கட்சி ஒசூர் மாநகர தலைவர் தியாகராஜன் ,மதிமுக மாநகர செயலாளர் ஈழம் குமரேசன், மனிதநேய மக்கள் கட்சி மாவட்ட செயலாளர் ஜூபேர், தமிழ்தேச குடியரசு இயக்கம் மாவட்ட செய லாளர் விக்னேஸ், தமிழ்நாட்டு கல்வி இயக்கம் ஒப்புரவாளன், மனிதநேய ஜனநாயக கட்சி மாவட்ட தலைவர் முகமது உமர், மே17 இயக்கம் மோகன் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண் டனர்.
தந்தை பெரியாரின் இறுதி முழக்கம் 50ஆம் ஆண்டு விளக்க பொதுக்கூட்டம்
Leave a Comment