புதுடில்லியில் திருச்சி சிவா எம்.பி. பேட்டி!
புதுடில்லி,டிச.21- நாடாளுமன்ற மாநிலங்களவையில் இருந்து நேற்று (20.12.2023) காலை, தி.மு.க. உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்த பின்னர் செய்தி யாளர்களுக்குப் பேட்டியளித்த மாநிலங் களவை தி.மு.க. குழுவின் தலைவர் திருச்சி சிவா, ‘‘கடும் புயல், மழை வெள் ளத்தால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள தமிழ்நாட்டுக்கு நிவாரண நிதி வழங்கு வதில் ஒன்றிய பா.ஜ.க. அரசு ஓரவஞ்சனையுடன் செயல்படுகிறது’’ என்று குற்றஞ்சாட்டினார்.
புதுடில்லியில் தி.மு.க. மாநிலங்க ளவைக் குழுத் தலைவர் திருச்சி சிவா, நேற்று (20.12.2023) செய்தியாளர்களிடம் பேசுகையில், குறிப்பிட்டதாவது:-
ஒரே நாடு – ஒரே கட்சி – ஒரே மதம் என்பது போல நாடாளுமன்றம் என்பது ஒரே கட்சிக்கு உரியதாக ஆகிவிட்டது. நாடாளுமன்றத்தில் ஆளுங்கட்சி உறுப் பினர்கள் பேசுவதும் அதைதலைவர் கேட்பதும், ஆளுங்கட்சி உறுப்பினர் களை மட்டுமே சன்செட் தொலைக்காட்சி காட்டுவதும் ஆகிவிட்டது.எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பேசுவதற்கு ஒலிபெருக் கியும் தருவதில்லை தொலைக்காட்சியில், நாங்கள் குரலெழுப்பு வதை காட்டுவது மில்லை.
தமிழ்நாட்டிற்கு நிவாரண நிதி தருவதில் ஒன்றியஅரசு ஓரவஞ்சனை செய்கிறது. இதுவே குஜராத்தில் வெள்ளப் பாதிப்பு ஏற்பட்டால் உடனே ஆயிரம் கோடி ரூபாய் விடுவிக்கிறார்கள். ஆனால் தமிழ்நாட்டிற்கு வெள்ளப் பாதிப்பு நிவாரணத் தொகையிலிருந்து உரிய பங்கினைக் கூட குறைவாகத்தான் கொடுத்துள்ளனர். வழக்கமாக பேரிடர் நிவாரண நிதியிலிருந்து விடுவிப்பது போல்தான் விடு வித்திருக்கிறார்கள்
குரல் வளையை நசுக்கப் பார்க்கிறார்கள்!
டிசம்பர் 13ஆம் தேதி நடந்த நிகழ்வு குறித்து பிரதமர் மோடியும், ஒன்றிய உள்துறை அமைச்சரும் நாடாளுமன்றத் தில் இதுகுறித்து விளக்கம் தரமறுக்கிறார் கள். மாறாக, இதுகுறித்து வெளியே பேசுகிறார்கள். நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் எல்லாம் ஏதோ பொறுப் பற்ற செயலைச் செய்வது போல் சித்தரிக்கிறார்கள். இதனால் எதிர்க்கட்சி களின் உரிமைகள் எல்லாம் பறிக்கப் படுகிறது .
இரு அவைகளிலும், மயக்கம் வரும் அளவிற்கு குரல் எழுப்பி உள்ளோம். ஆனால் அரசு அதற்குச் செவி சாய்க்க வில்லை. அதனால் இன்று வெளிநடப்பு செய்துள்ளோம். நாடாளுமன்றத்தை தவறான திசையில் கொண்டு சென்று எங்கள் குரல் வளையை நசுக்கப் பார்க் கிறார்கள், குடியரசு துணைத் தலை வரைப் போல் எதிர்க்கட்சி உறுப்பினர் ஒருவர் நையாண்டி செய்து காட்டிய சர்ச்சைக்கு – வெளியில் நடந்த ஒரு பிரச் சினைக்கு நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர், அவையில் அறிக்கை வாசிக்கிறார்.
உலகளவில் இந்தியாவின் பிம்பம் சிதைந்து போயிருக்கும்!
அவைக்கு வெளியில் நடந்ததை இவ்வளவு முக்கியமாக எடுத்துக் கொள் ளும் ஒன்றிய அரசு, ஏன் அவைக்கு உள்ளே நடைபெற்ற மிகப்பெரிய பாது காப்புக் குறைபாட்டை விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளவில்லை.
ஒருவேளை நாடாளுமன்ற அத்து மீறல் நிகழ்வில் நாடாளுமன்ற உறுப் பினர்களுக்கு ஏதும் நடந்திருந்தால் உலக அளவில் இந்தியாவின் பிம்பம் சிதைந்து போயிருக்கும். எனவே ஒன்றிய அரசு தங்களின் கடமையைப் புறக் கணித்து மக்களை திசை திருப்பவே இது போன்ற நடவடிக்கைகளில் ஈடுபடு கின்றனர் .
-இவ்வாறு திருச்சி சிவா எம்.பி. பேட்டியளித்தார்.