புதுடில்லி, டிச.21 நாட்டில் கரோனா தொற்று மீண்டும் பரவி வருகிறது. அந்த வகை யில் கடந்த 11 ஆம் தேதி நாட்டில் கரோனா நோயாளி களின் எண்ணிக்கை 938 ஆக இருந்தது. இது நேற்று முன்தினம் (19.12.2023) 1,970 ஆக அதிகரித்துள்ளது.
கேரளாவில் 79 வயது மூதாட்டி ஒருவருக்கு உருமாறிய ஜேஎன்.1 வகை கரோனா தொற்று கடந்த சில நாள்களுக்கு முன் கண்டறியப் பட்டது. இந்த வைரஸ் மகாராட்டிராவில் ஒருவரிடமும் கோவாவில் 19 பேரிடமும் கண்டறியப்பட்டுள்ளது. சிங்கப்பூர் உள்பட உலகின் பல்வேறு நாடுகளில் கரோனா தொற்று பரவுவதற்கு புதிய ஜேஎன்.1 வகை திரிபே காரணமாகக் கூறப்படுகிறது.
இதுகுறித்து இந்திய மருத்துவக் கழகத்தின் கரோனா பணிக் குழுவின் துணைத் தலைவர் ராஜீவ் ஜெயதேவன் கூறும்போது,
“ஜேஎன்.1 என்பது மேற்கத்திய நாடு களில் மிக வேகமாக பரவி வரும் ஒமிக் ரான் புதிய திரிபாகும். இந்த நாடுகளில் உள்ள கழிவுநீர் கண்காணிப்பு அமைப்பு இந்த வகை வைரஸை மிக அதிக அள வில் கண்டறிந்துள்ளது. இதன் பிரதி பலிப்பாக சமூகத்தில் இந்த வைரஸ் தொற்று அதிகரித்துள்ளதை காண முடிகிறது” என்றார்.
இந்நிலையில் ஒன்றிய சுகாதார அமைச்சகம் நேற்று (20.12.2023) காலை வெளியிட்ட புள்ளிவிவரப்படி, நாட்டில் புதிதாக 614 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.
கடந்த 5 நாள்களுக்கு முன்னர் பெங்களூருவில் உள்ள சாம்ராஜ்பேட் டையைச் சேர்ந்த 64 வயது முதியவர், 76 வயதான முதியவர் மற்றும் 44 வய தான அரசு ஊழியர் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். உயிரிழந்த மூவருக்கும் இதய நோய், சுவாசப் பிரச்சினை இருந்துள்ளது. இவர்கள் எந்த வகை வைரஸால் பாதிக்கப்பட்டனர் என்று ஆய்வு நடக்கிறது என்று மாநில சுகாதாரத் துறை வெளியிட்ட அறிக் கையில் தெரிவித்துள்ளது.
உயர்நிலைக் கூட்டம்
கரோனா தொற்று மீண்டும் பரவி வருவதைக் கருத்தில்கொண்டு ஒன்றிய சுகாதார அமைச்சர் மன்சுக்மாண்டவியா தலைமையில் டில்லியில் நேற்று (20.12.2023) உயர்நிலைக் கூட்டம் நடை பெற்றது. இந்தக் கூட்டத்துக்குப் பிறகு அமைச்சர் மாண்டவியா கூறியதாவது:
மக்கள் விழிப்புடன் இருக்க வேண் டும். ஆனால், பீதியடையத் தேவை யில்லை. நமது தயார் நிலையில் எவ் விதத் தளர்வும் இல்லை. பொது சுகா தாரம் என்று வரும்போது எவ்வித அர சியலுக்கும் இடமில்லை. கரோனா தொற் றால் பாதிக்கப்படும் மாநிலங்களுக்கு ஒன்றிய அரசு முழு உதவிகள் அளிக் கும். பாதிக்கப்பட்ட மாநிலங்கள் தயார் நிலையை உறுதி செய்ய ஒவ்வொரு மருத்துவமனையிலும் 3 மாதத்துக்கு ஒரு முறை கரோனா தடுப்பு ஒத்திகை நடத்த வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.