புதுடில்லி,டிச.20- “இலவசங்கள் அல்லது நலத் திட்டங்கள் நல்ல இலக்கை அடையும் வரை அத னால் எந்தப் பாதகமான விளை வுகளும் ஏற்படுவதில்லை. பெறு பவர்கள் ஏழை மக்களாக மட்டுமே இருக்கவேண்டும். இலவசங்கள் உண்மையான பயனாளிகளுக்கு செல்லும்போது அது சாதகமான விளைவுகளையே ஏற்படுத்தும், அவர்களது வாழ்க்கைத் தரத்தை உயர்த்தும்” என்று இந்திய ரிசர்வ் வங்கியின் மேனாள் ஆளுநர் ரகுராம் ராஜன் கூறியுள்ளார்.
“இந்தியா டுடே”யின் கன்சல்டிங் எடிட்டர் ராஜ்தீப் சர்தேசாய்க்கு அளித்த பிரத்யேகப் பேட்டியில் அவர் மேலும் கூறியிருப்பதாவது:
ஏழைக் குடும்பங்களைச் சேர்ந்த குழந்தைகளுக்கு அதிக ஊட்டச்சத்து மிக்க உணவுகளை வழங்குவது. அவர்களை சிறந்த பள்ளிகளுக்கு அனுப்புவது போன் றவற்றிற்கு இலவசங்களை வழங் குவது நல்ல அம்சம்தான். இதை ஏழை குடும்பங்களுக்கு அரசு செய் யும் முதலீடாகக் கருத வேண்டும்.
இதை சிறந்த தேர்வாகவே பார்க்கிறேன். ஆனால், பள்ளிகள், சுகாதாரம், ஊட்டச்சத்து போன்ற பிரச்சினைகளுக்கு குறைந்தளவே முதலீடு செய்கிறார்கள். இலவசங் களின் பலன்கள் இன்னாருக்குத் தான் என்றில்லாமல் இலக்கற்றுப் போகும்போதுதான் பிரச்சினை எழுகிறது. நான் எல்லாவிதமான தலைவர்களுக்கும் ஆலோசனை களை வழங்கியுள்ளேன். யஷ்வந்த் சின்ஹா (பாஜக) நிதியமைச்சராக இருந்தபோது நான் அவருக்கும் ஆலோசனைகளை வழங்கியுள் ளேன். இன்றைக்கு திமுகவுக்கு ஆலோசனை வழங்குகிறேன். காங் கிரஸ் கட்சியுடனும் பேசினேன். பிற கட்சிகளுக்கும் ஆலோசனை வழங்கியுள்ளேன். தேசத்தை முன் னோக்கி கொண்டு செல்வதுதான் இலக்கு. நம் பொது இலக்கும் அதுதான்.
-இவ்வாறு ரகுராம் ராஜன் பேசியுள்ளார்.
இலவசங்கள் பற்றி ரகுராம் ராஜன்
Leave a Comment