புதுச்சேரி, டிச. 20– “சுயமரியாதைச் சுட ரொளி” வ.சு. சம்பந்தம் பத்தாமாண்டு நினைவு நாள் கருத்தரங்கம் 16.12.2023 மாலை 6:30 மணியளவில் புதுச்சேரி, இராசா நகர் பெரியார் படிப்பகத்தில் நடைபெற் றது. புதுச்சேரி மாநிலத் திராவிடர் கழகத் தலைவர் சிவ. வீரமணி தலைமையில் மாவட்டத் திரா விடர் கழகத் தலைவர் வே.அன்ப ரசன் வரவேற்புரை நிகழ்த்தினார்.
ஜீனோ மாறன் பில்டர்ஸ் மேலாண்மை இயக்குநர் ச.தங்க மணிமாறன் முன்னிலையில் மேனாள் அமைச்சரும் புதுச்சேரி சமூக நீதிப் பேரவை நிறுவனருமான. இரா.விசுவநாதன் பெரியார் பெருந்தொண்டர் வ.சு. சம்பந்தம் திருவுருவப் படத்தினை திறந்து வைத்தார்.
மறுமலர்ச்சி திராவிட முன் னேற்றக் கழகத்தின் கொள்கை விளக்க அணிச் செயலாளர் ஆ.வந் தியத் தேவன் கலந்து கொண்டு “சுயமரியாதைச் சுடரொளிகள் புதைக்கப்படுவதில்லை, விதைக்கப் படுகிறார்கள்” என்ற தலைப்பில் உரையாற்றினார். நிகழ்ச்சியினை விடுதலை வாசகர் வட்டத் தலை வர் கோ.மு.தமிழ்ச்செல்வன் ஒருங் கிணைத்தார்.
நிகழ்ச்சியில் மேனாள் சட்ட மன்ற உறுப்பினர்கள் நாரா.கலைநாதன்,மா. இளங்கோ, சமூக நீதிப் பேரவை அமைப்பாளர் து.கீதநாதன், வழக்குரைஞர் இரா. தாமோதரன், எழுத்தாளர் ந.மு. தமிழ்மணி, பெரியார் சிந்தனை யாளர் இயக்கம் அ.ச.தீனா, மாண வர் கூட்டமைப்பு சீ.சு.சுவாமி நாதன், தமிழர்களம் கோ.அழகர், எழுத்தாளர் கழகம் புதுவைத் தமிழ்நெஞ்சன், தன்னுரிமைக் கழகத் தலைவர் தூ.சடகோபன், மதிமுக பொறுப்பாளர் இளங் கோவன், தெ.தியாகு, ஆனந்திதீனா, தீ.சண்முகம், காப்பாளர் இர.இராசு, பொதுக்குழு உறுப்பி னர் இரா.விலாசினி, துணைத் தலைவர் மு.குப்புசாமி, புதுச்சேரி கழக நகராட்சி தலைவர் மு.ஆறு முகம், செயலாளர் களஞ்சியம் வெங்கடேசன், இளைஞரணித் தலைவர் தி.இராசா, தொழிலாளர் கழகச் செயலாளர் கே.குமார், பகுத்தறிவாளர் கழக மாநில அமைப்பாளர் கு.இரஞ்சித் குமார், தலைவர் நெ.நடராசன், பெ.ஆதி நாராயணன், ப.தேவகி, ப.இராகப் பிரியா, து.கல்பனா, முகமது நிஜாம், இரிச்சாம்பாளையம் செ. இளங்கோவன், இரா. ஆதிநாரா யணன், பாகூர் தாமோதரன்,ச. சித்தார்த், சாலை .இர.சாம்பசிவம், ப.சுரஷ், கு.உலகநாதன்,தெ.தமிழ் நிலவன், கவிஞர்.தே.வெற்றிவேல், பரத், லாரன்ஸ், ஸ்டாலின் உட்பட பலர் கலந்து கொண்டனர். முன்ன தாக வ.சு.சம்பந்தம் அவர்களின் வாழ்க்கை வரலாற்றுக் குறிப்பை கழக உழவர்கரை நகராட்சி தலை வர் சு.துளசிராமன் வாசித்தார். நிறைவாக விடுதலை வாசகர் வட்டச் செயலாளர் ஆ.சிவராசன் நன்றி கூறினார்.