20.12.2023
டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்:
* நாடாளுமன்ற பாதுகாப்பு குறைபாடு குறித்து அவை யில் விளக்கம் அளிக்கக் கோரி அமளியில் ஈடுபட்டதாக மக்களவையில் இருந்து மேலும் 49 எதிர்க்கட்சி நாடாளு மன்ற உறுப்பினர்கள் இடைநீக்கம் செய்யப்பட்டனர். இந்த விவகாரத்தில் இடைநிக்கம் செய்யப்பட்டவர்களின் எண் ணிக்கை 141 ஆக அதிகரித்தது. இதே விவகாரத்தால் மாநிலங்களவையும் முடங்கியது
* பிற்படுத்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீட்டை அதிகரிக்க தெலங்கானா அரசு முடிவு காரணமாக கிராம பஞ்சாயத்து தேர்தல்கள் தள்ளிவைப்பு.
டெக்கான் கிரானிக்கல்,சென்னை:
* டில்லியில் பிரதமர் மோடியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரவு சந்தித்து பேசினார். அப்போது தமிழ் நாட்டில் ஏற்பட்டுள்ள வெள்ள பாதிப்பு தொடர்பாக முக்கிய ஆலோசனை நடத்தினார். மேலும் வெள்ள நிவாரண உதவிகளுக்கென உடனடியாக ரூ.2000 கோடி வழங்கும்படியும் கேட்டுக் கொண்டார்.
* நாடாளுமன்றத்தில் இருந்து எதிர்க்கட்சி உறுப் பினர்கள் தற்காலிக நீக்கம் செய்யப்பட்டதை கண்டித்து இந்தியா கூட்டணி சார்பில் டிசம்பர் 22ஆம் தேதி நாடு தழுவிய ஆர்ப்பாட்டம்.
தி டெலிகிராப்:
* புதிய நாடாளுமன்றத்தில் எந்த அர்த்தமுள்ள விவாதமும் இல்லாமல் “கடுமையான மசோதாக்களை” நிறைவேற்றுவதை உறுதி செய்வதற்காக எதிர்க்கட்சி உறுப் பினர்களை வெளியேற்றும் “முழுமையான சுத்திகரிப்பு” செயல்படுத்தப்படுகிறது, ‘நாமோக்ரசி’ அதன் அனைத்து கொடுங்கோன்மையும் வெளிச்சத்திற்கு வருகிறது என காங்கிரஸ் கடும் கண்டனம்.
* இந்தியா கூட்டணியின் சார்பில் காங்கிரஸ் தலைவர் கார்கே பிரதமராக முன்னிறுத்தப்பட வேண்டும் என மம்தா, அரவிந்த் கேஜ்ரிவால் யோசனை. முதலில் ஆணவக்கார மோடியை தோற்கடிப்போம். பின்னர் பிரதமரை தேர்ந் தெடுப்போம் என மல்லிகார்ஜூன கார்கே பதில்.
டைம்ஸ் ஆப் இந்தியா:
* நாடு முழுவதும் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்துவது தொடர்பாக பாஜக உள்ளிட்ட அரசியல் கட்சிகளின் நிலைப் பாட்டை ஆர்.எஸ்.எஸ். ஏற்கவில்லை. ஜாதிவாரி கணக் கெடுப்பு தேசிய ஒற்றுமையை பாதிக்கும் என நாக்பூரில் ஆர்.எஸ்.எஸ். அலுவலகத்திற்குச் சென்ற மகாராட்டிராவின் பிஜேபி மற்றும் சிவசேனா சட்டமன்ற உறுப்பினர்களுடனான சந்திப் பின் போது ஆர்.எஸ்.எஸ். தனது எதிர்ப்பை தெரிவித்து உள்ளது.
– குடந்தை கருணா
கவனத்திற்குரிய முக்கிய செய்திகள்
Leave a Comment