சென்னை. டிச. 20- மிக்ஜாம் புயல் வெள்ளப் பேரிடர் காரணமாக, பெரியார் தொண்டரணி, பெரியார் மருத்துவக் குழுமம் ஆகிய அமைப்புகள் தொண்டு செய்து வருகின்றன. இதற்காக திராவிடர் கழ கம், பகுத்தறிவாளர் கழ கத் தோழர்கள் முடிந்த வரை உதவி செய்து வரு கின்றனர்.
தமிழர் தலைவர் ஆசிரி யர் கி. வீரமணி அவர்க ளின் ஆலோசனையில் உருவான, ”பெரியார் தொண்டறம் அணி”, மிக் ஜாம் புயல் வெள்ளத்திற் குப் பிறகு கடந்த 6 ஆம் தேதி முதல் 12 ஆம் தேதி வரை சென்னை நகரம், புறநகர், தாம்பரம் போன்ற பகுதிகளில் பாதிக்கப் பட்ட 15,000 மக்களைச் சந்தித்து, அவர்களுக்கான உணவு மற்றும் நிவார ணப் பொருட்களை வழங் கினர். அடுத்து, ”பெரியார் மருத்துவக் குழுமம்” தனது பணிகளைத் தொடங்கி யது. இந்த இரண்டு அமைப்புகளும் பேரிடர் காலங்களில் சிறப்பாக மக்களின் தேவைகளை விளம்பரம் இல்லாமல் செய்து வருகின்றன. பெரியார் தொண்டறம் அணி ஒருங்கிணைப்பா ளராக ச.பிரின்சு என்னா ரெசு பெரியார், பெரியார் மருத்துவக் குழுமத்தின் தலைவராக மருத்துவர் இரா.கவுதமன், செயலாள ராக மருத்துவர் ச.மீனாம் பாள் ஆகியோரும் தங்க ளின் சிறப்பான பங்களிப்பை நல்கி வருகின்றனர்.
இந்நிலையில் கடந்த 15.12.2023 அன்று காரைக் குடியில் முகாமிட்டிருந்த தமிழர் தலைவர் ஆசிரி யர் கி. வீரமணி அவர் களை மாவட்டத் தோழர் கள் கழகப் பணிகள் குறித் தும், விடுதலை சந்தா வழங்குவதற்காகவும் சந்தித்தனர். அப்போது காரைக்குடி மாவட்டத் தலைவர் ம.கு.வைகறை, விடுதலை சந்தாக்கள் வழங்கியதோடு, தான் நடத்திவரும் ”SKY MED HEALTH CARE” அமைப்பு மூலம் சளி, காய்ச்சல், இருமல், ஒவ்வாமை, வயிற்றுப் புண், வயிற்று வலி போன்றவற்றிற்கு ரூ. 30,000- மதிப்பிலான மருந்துகள் வழங்கியதற் கான பட்டியலை ஆசிரி யரிடம் வழங்கினார். அதேபோல் ஊற்றங்கரை கழகத் தோழர் பழ.பிரபு, தான் நடத்திவரும் ”ராசா மருந்தகம்” மூலம், ரூ. 10,000 மதிப்பிலான மருந் துகள் அனுப்பி வைத்தார். சென்னை நங்கை நல்லூர் கழகத் தோழர் மணிவண் ணன், தான் நடத்திவரும் மருந்து விற்பனையை நிறுத்த முடிவு செய்துள்ள நிலையில், வட தமிழ்நாட் டில் ஏற்பட்டுள்ள பெரு வெள்ளப் பேரிடரில் பெரியார் மருத்துவக் குழுமம் ஆற்றி வரும் தொண்டில், தானும் பங்குபெற விரும்பி சுமார் 3 லட்சம் மதிப்புள்ள மருந்துகளை அனுப்பி வைத்தார். தொடர்ந்து கழகத் தோழர்கள், தன் னார்வலர்கள் இது போன்ற உதவிகள் செய் வதற்காக ஒருங் கிணைப் பாளர்களிடம் பேசிக் கொண்டு இருக்கின்றனர்.
இந்திய மருத்துவ சங்கம் (Indian Medical Mission – Tamil Nadu), இந்தியா கேர்ஸ் (India Cares) , சைல்டு ஹெஃப் பவுண்டேஷன் (Child Help Foundation) ஆகிய மூன்று அமைப்புகளும், அலெக்ஸ் கே.சாம், மதுரை ராமச்சந்திரன் உள்ளிட்ட தோழர்களும் மருந்து பொருள்களை வழங்கி வெள்ளப் பேரி டர் நிவாரணப் பணிக ளில், பெரியார் மருத்துவக் குழு மத்துடன் இணைந்து பெரும் பங்காற்றியது குறிப்பிடத்தக்கது.