காவிரி நீர்: டிசம்பர் இறுதி வரை கருநாடகம் தமிழ்நாட்டுக்கு 3128 கன அடி நீரை திறக்க காவிரி ஒழுங்காற்று குழு பரிந்துரை

3 Min Read

புதுடில்லி, டிச.20 நவம்பர் 22-ஆம் தேதி நடந்த காவிரி ஒழுங்காற்று குழு கூட்டத்தில் டிசம்பர் 19-ஆம் தேதி வரை தமிழ்நாட்டிற்கு விநாடிக்கு 2,700 கனஅடி நீரை திறந்துவிட வேண்டும் என்று பரிந்துரை செய்யப்பட்டது.
இந்நிலையில் காவிரி ஒழுங்காற்று குழுவின் 91-ஆவது கூட்டம் அதன் தலைவர் வினீத் குப்தா தலைமையில் காணொளி மூலம் டில்லியில் நேற்று (19.12.2023) நடை பெற்றது. இதில் குழுவின் செயலாளர் டி.டி.ஷர்மா, உறுப்பினர் கோபால் ராய், தமிழ் நாடு அரசின் சார்பில் காவிரி தொழில் நுட்பக்குழு தலைவர் சுப்பிரமணியம் ஆகி யோர் பங்கேற்றனர். இந்த கூட்டத்தில் கருநாடக அணைகளின் நீர்மட்டம், நீர்வரத்து, காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பதிவான மழையின் அளவு உள்ளிட்டவை குறித்து விவாதிக்கப்பட்டது.
தமிழ்நாடு அரசின் தரப்பில், ‘‘உச்ச நீதிமன்றத்தின் இறுதி உத்தரவின்படி, தமிழ்நாட்டிற்கு டிசம்பர் மாதம் வரை வழங்க வேண்டிய நீரை கருநாடகா திறந்துவிட வேண்டும். ஆனால் நிகழாண்டில் இதுவரை 60 டிஎம்சி நீர் மட்டுமே திறந்துவிடப்பட்டுள்ளது. 90 டிஎம்சி நீர் இன்னும் நிலுவையில் உள்ளது. டிசம்பரில் மட்டும் 14 டிஎம்சி நீரை திறக்க வேண்டும். சம்பா, குறுவை சாகுபடிக்கு தேவையான நீரை கருநாடக அரசு திறந்துவிட வேண்டும்” என்று வலியுறுத்தப்பட்டது.
இதற்கு கருநாடக அரசின் தரப்பில், ‘‘கரு நாடகாவில் வறட்சி நிலவுவதால் அணைகளில் குறைந்த அளவிலேயே நீர் இருப்பில் உள்ளது. நிகழாண்டில் 4 அணைகளுக்கும் சேர்த்து 50.367 டிஎம்சி நீர் மட்டுமே வந்துள்ளது. தமிழ்நாட்டிற்கு கூடுதலாக நீரை திறந்தால் கருநாடகாவில் குடிநீர் பஞ்சம் ஏற்படும்”என்று தெரிவிக்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து பேசிய காவிரி ஒழுங்காற்றுக் குழு தலைவர் வினீத் குப்தா, ‘‘தமிழ்நாட்டின் விவசாய தேவைக்காக டிசம்பர் மாதம் இறுதிவரை விநாடிக்கு 3,128 கன அடி நீரை திறந்துவிட வேண்டும். அதாவது டிசம்பர் 20-ஆம் தேதி முதல் பிலிகுண்டுலு சோதனை நிலையத்தில் விநாடிக்கு 3,128 கன அடி நீர் தமிழ்நாட்டிற்கு செல்வதை உறுதி செய்ய வேண்டும். ஜனவரி மாத இறுதி வரை 1,030 கன அடி நீரை திறந்துவிட வேண்டும்” என பரிந்துரை செய்தார்.
காவிரி ஒழுங்காற்று குழுவின் இந்த பரிந் துரைக்கு கருநாடகாவில் விவசாய அமைப் பினரும், கன்னட அமைப்பினரும் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். பாஜக, மஜத உள்ளிட்ட எதிர்க்கட்சியினர் காவிரி நீரை தமிழ்நாட்டிற்கு திறந்துவிடக்கூடாது என கருநாடக அரசை வலியுறுத்தியுள்ளனர்.

வெள்ள பாதிப்பு : நிவாரணப் பொருட்களை வழங்க விரும்புவோர் சிறப்பு குழுக்களை அணுகலாம் தமிழ்நாடு அரசு அறிவிப்பு
சென்னை,டிச.20- கனமழை, வெள்ளத் தால் நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உணவு, நிவாரணப் பொருட்களை வழங்க பலர் முன் வந்துள்ளனர். இந்தப் பணியை அய்.ஏ.எஸ். அதிகாரிகள் மூலம் ஒருங்கிணைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி தூத்துக்குடி மாவட்டத்துக்கு செந்தில்ராஜ் ஒருங்கிணைப்பு அலுவலராக நியமிக்கப்படுகிறார். அவரது அலைபேசி எண் 7397770020 ஆகும். பாதுகாப்பு மற்றும் நிவாரண பொருட்களை வழங்கும் மய்யமாக தூத்துக்குடியில் உள்ள உள்விளையாட்டரங்கம் செயல்படும்.
தூத்துக்குடியில் உள்ள இந்த கட்டுப்பாட்டு அறை பொறுப்பு அலுவலர்களாக கூடுதல் ஆட்சியர் ஐஸ்வர்யா (அலைபேசி எண்-8973743830), தூத்துக்குடி மாநகராட்சி துணை ஆணையர் ராஜாராம் (9943744803), ஆட்சி யரின் நேர்முக உதவியாளர் அமுதா (9445008155) ஆகியோர் நியமிக்கப்படு கின்றனர்.நெல்லை மாவட்டத்தில் இந்த பணிகளை ஒருங்கிணைக்க நெல்லை மாவட்ட நகராட்சி ஆணையர் தாக்கரே சுபம் ஞான தேவ்ராவ் (9442218000) நியமிக்கப்பட் டுள்ளார். நெல்லை உதவி ஆட்சியர் (பயிற்சி) கிஷன் குமார் (9123575120), நெல்லை மாவட்ட சிறப்பு வருவாய் அலுவலர் ரேவதி (9940440659) ஆகியோர் இந்த பணியை ஒருங்கிணைப்பார்கள். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *