பம்பல், அக். 22- பம்மல் பகுத் தறிவாளர் பேரவையின் சார்பில் கலைஞர் நூற்றாண்டு விழா 8.10.2023 ஞாயிறு மாலை 6.00 மணிக்கு பம்மல் இம் மானுவேல் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி வளா கத்தில் நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு பேரவைத் தலைவர் வை.பார்த்திபன் தலையேற்று, காந்தி யாரை மாட்டுத் தொழு வத்திலும், மேனாள் பிர தமர் இந்திரா காந்தியை கிணற்றடியிலும், மேனாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆரை ஏரிக்கரையி லும், காஞ்சி சங்கராச் சாரியார் சந்தித்ததைச் சுட்டிக்காட்டி, ஸநா தனம் அங்குதான் நிலை பெற்றிருக்கிறது என்றும் அதனைப் புறங்காண வேண்டிய அவசியத்தை யும் வலியுறுத்தினார்.
”கலைஞரின் சாதனை முத்துக்களில் நூறு” என்ற நூலினைப் புலவர் இ.ஆறுமுகம் வெளி யிட்டு, நூலின் சிறப்பை யும், கலைஞர் தமிழ்ச் சமுதாயத்திற்கு ஆற்றிய தொண்டினையும் குறிப் பிட்டு ஆய்வுரை வழங்கி னார். தாம்பரம் மாவட்ட செயலாளர் நாத்திகன் கலந்துகொண்டு கலைஞ ரின் சாதனைகளை நினைவு கூர்ந்து உரை யாற்றினார். நூலின் முதற் படியை நல்லாசிரியர் கோ.வி.பழனி பெற்றுக் கொண்டார்.
கழகத் துணைப் பொதுச்செயலாளர் வழக்குரைஞர் சே.மெ.மதிவதனி நூற்றாண்டு விழாச் சிறப்புரையை ஆற்றும்பொழுது, 1971இல் பகுத்தறிவாளர் களாகிய அரசு அலுவலர் கள் கலந்துகொள்ளும் வகையில், தந்தை பெரி யாரின் ஆலோசனையை ஏற்று அரசு அலுவலர்கள் உள்ளிட்ட அனைவரும் கலந்துகொள்ளும் வகை யில் கலைஞர் பகுத்தறி வாளர் கழகத்தைத் துவக் கியதைக் குறிப்பிட்டு, பகுத்தறிவாளர்கள் நூற் றாண்டு விழா கொண்டா டுவது சாலச்சிறந்தது என்று குறிப்பிட்டார். மேலும், பெண்களுக்குச் சொத்துரிமை, அரசு வேலைவாய்ப்பில் இட ஒதுக்கீடு, உள்ளாட்சிப் பதவிகளில் ஒதுக்கீடு, வித வைத் தாய்மார்களுக்கு நிதி உதவி அதே நேரத்தில் அவர்களின் மகள்களுக்கு திருமண உதவித்திட்டம் போன்ற சாதனைகளைக் குறிப்பிட்டு புகழாரம் சூட்டினார். கோவில் களை விட்டு அரசு வெளி யேற வேண்டும் என்பவர் கள் யாரிடம் ஒப்படைப் பது என்பது பற்றி தெளி வாகப் பேச இயலவில்லை என்பதோடு இன்றளவும் கோயில்கள் இந்துக்க ளின் கட்டுப்பாட்டில் தான் உள்ளது என்பது தெரியாமல் ஒன்றியப் பிரதமர் முதற்கொண்டு பேசி வருவதில் உள்ள நியாயமின்மையையும், மேலும் கலைஞரின் பல்வேறு சாதனைகளை யும்விளக்கி உரையாற்றி னார்.
நிகழ்ச்சியின் இறுதி யாக பம்மல் திராவிடர் கழகத்தலைவர் ந.கோபி நன்றியரை ஆற்ற நிகழ்ச்சி கள் நிறைவடைந்தன.