புதுடில்லி, டிச. 18- தீ பிடிக்காத பசையை உடலில் பூசிக் கொண்டு தீக்குளிப்பு சம்பவத்தை அரங்கேற்றவும் நாடா ளுமன்ற தாக்குதல் சதிகாரர்கள் சதித் திட்டம் தீட்டியிருந்ததாக புதிய தகவல்கள் வெளியாகி உள்ளன.
நாடாளுமன்றத்துக்குள் அத்துமீறி நுழைந்து தாக்குதல் நடத்திய சதிகாரர்கள் அடுத்தடுத்து கைது செய்யப்பட்டு விசாரிக்கப் பட்டு வருகின்றனர். இந்த தாக்கு தல் சதிகாரர்களிடம் நடத்தப்பட்ட விசாரணைகளில் 3 வகையான சதித் திட்டங்களை அவர்கள் செயல்படுத்த திட்டமிட்டிருந்தது தெரிய வந்துள்ளது.
நாடாளுமன்ற பார்வையாளர் மாடத்தில் இருந்து சாகர் சர்மா, மைசூர் மனோரஞ்சன் இருவரும் கடந்த 13.12.2023 அன்று மக்கள வைக்குள் குதித்து புகை குப்பிகளை வீசி தாக்குதல் நடத்தினர்.
இந்த இருவரையும் மக்களவை உறுப்பி னர்கள் சுற்றி வளைத்து தாக்கி மடக்கிப் பிடித்தனர். நாடாளு மன்ற வளாகத்தில் நீலம் தேவி, அமோல் சிண்டே இருவரும் புகை குப்பிகளை வீசித் தாக்குதல் நடத் தினர். இந்த சம்பவங்களை லலித் ஜா என்ற சதிகாரர் வீடியோவாக படம் பிடித்து சமூக வலைதளங் களில் பதிவிட்டார். இவர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டு பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் விசாரிக்கப்பட்டு வருகின்றனர்.
இதனிடையே 3 வகையான சதித் திட்டங்களுடன் அதாவது பிளான் ஏ, பிளான் பி, பிளான் சி என தாக்குதல் சதிகாரர்கள் நாடா ளுமன்றத்துக்கு வந்துள்ளனர்; நாடாளுமன்ற பார்வையாளர் மாடத்தில் இருந்து குதித்து புகை குப்பிகளை வீசி தாக்குதல் நடத் துவது; துண்டு பிரசுரங்களை வீசு வது; இவற்றை காட்சிப் பதிவு செய்து சமூக வலைதளங்களில் வெளியிடுவது பிளான் ஏ, பிளான் பி ஆகியவை. 3ஆ-வது சதித் திட்டம் தான் தீக்குளிப்பு நாடகம் நடத்து வது. அதாவது தீ பிடித்துவிடாத பசையை உடலில் பூசிக் கொண்டு தீக்குளிப்பு நாடகம் நடத்துவதற்கும் இந்த சதிகாரர்கள் சதித் திட்டம் தீட்டி இருந்தனர் என்கின்றனர் டில்லி காவல்துறையினர்.
முக்கிய குற்றவாளியான லலித் ஜாவுக்கு 7 நாள் காவல் விதிக்கப்பட் டிருந்த இந்த தாக்குதல் சதிகாரர் களுக்கும் இவர்கள் நாடாளுமன்றத் தில் நுழைவதற்கு அனுமதி சீட்டு பெற்றுக் கொடுத்த பாஜக மக்க ளவை உறுப்பினர் பிரதாப் சிம்ஹா வுக்கான தொடர்பு குறித்தும் டில்லி காவல்துறையினர் விசாரிக்க உள்ளனர். பிரதமா சிம்ஹாவை அழைத்து அவரிடம் வாக்குமூலம் பதிவு செய்யவும் டில்லி காவல்துறையினர் முடிவு செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது.