நெய்வேலி,டிச.18- நெய்வேலியில் என்.எல்.சி. சார்பில் நடந்த சுரங்க எந்திரங்கள் தொழிற்பயிற்சிக்கான எழுத்துத்தேர்வு பாதியில் நிறுத்தப் பட்டது. வினாக்கள் புரியவில்லை என்று கூறி அதிகாரிகளுடன் தேர் வர்கள் வாக்கு வாதத்தில் ஈடுபட் டனர்.
கடலூர் மாவட்டம் நெய் வேலியில் உள்ள என்.எல்.சி. 5 நிறுவனத்தில் உள்ள சுரங்கங்களில் எந்திரங்களை இயக்குவதற்கான பயிற்சிக்கு 238 பணியிடங்களும், உதவியாளர் பணிக்கு 262 பணியிடங்களும் காலியாக உள்ளன.
இதில் எந்திரங்களை இயக்குவ தற்கான பயிற்சிக்கு டிப்ளமோ படித்தவர்களும், உதவியாளர் பணிக்கு அய்.டி.அய். படித்தவர் களும் தேர்வு செய்யப்பட உள்ளனர். மேலும் இந்த பணியிடங்கள் என்.எல்.சி. நிறுவனத்திற்கு வீடு, நிலம் கொடுத்தவர்களின் குடும்பங் களுக்கு வழங்க முடிவு செய்யப் பட்டுள்ளது.
தேர்வர்கள் அதிர்ச்சி
அதன்படி முதல் கட்டமாக எந்திரங்களை இயக்குவதற் கான பயிற்சிக்கு 238 காலிப் பணியிடங்களை நிரப்ப எழுத்துத் தேர்வு நடத்தப்படும் என்று என்.எல்.சி. நிர்வாகம் அறிவித்தது. இந்த பணிக்கு டிப்ளமோ படித்த 720 பேர் விண்ணப்பித்திருந்தனர். இவர்களுக்கான எழுத்துத் தேர்வு நெய்வேலி ஜவகர் அறிவியல் கல் லூரியில் நேற்று (17.12.2023) காலை 10 மணிக்கு தொடங்கியது.
இந்த தேர்வை எழுத 683 பேர் வந்திருந்தனர். இவர்களுக்கு வினாத்தாள் வழங்கப்பட்டது. வினாத்தாளைப் பார்த்ததும் தேர்வர்கள் அதிர்ச்சி அடைந்தனர். ஏனெனில் வினாத்தாள் களில் கேட்கப்பட்ட கேள்விகள் அவர் களுக்கு புரியவில்லை. இதனால் மாற்றம் அடைந்த தேர்வர்கள். இது குறித்து அங்கிருந்த அதிகாரி களிடம் தெரிவித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
தேர்வு பாதியில் நிறுத்தம்
இதையடுத்து தேர்வர்களுக்கு வழங்கப்பட்ட வினாத்தாள், விடைத்தாள், அடையாள அட்டை ஆகியவற்றை அதிகாரிகள் திரும்பப்பெற்றனர்.
பின்னர் அதிகாரிகள் கூறு கையில், ‘சரியாக மொழிபெயர்ப்பு இல்லாத கார ணத்தால் இந்த தேர்வு ரத்து செய்யப்படுகிறது. இதற்கு பதில் மற்றொரு நாளில் தேர்வு நடத் தப்படும். இதற்கான அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும் என்றனர். தேர்வு பாதியிலேயே நிறுத்தப் பட்டதால் தேர்வர்கள் ஏமாற்றத் துடன் அங்கிருந்து சென்றனர்.
என்.எல்.சி.விளக்கம்
இது குறித்து என்.எல்.சி. நிர்வாகம் வெளியிட்டுள்ள செய் திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதா வது:- சிறப்பு சுரங்க எந்திரங்கள் தொழிற்பயிற்சிக்கான எழுத்துத் தேர்வு நடத்த திட்டமிடப்பட்டது. இதற்காக ஆங்கிலம் மற்றும் தமிழில் வினாத்தாள் அமைத்தல், எழுத்துத் தேர்வு நடத்துதல், ஓ.எம்.ஆர். தாள்களை மதிப்பீடு செய்தல் மற்றும் எழுத்துத் தேர்வு முடிவு களை ஒப்படைத்தல் ஆகிய பொறுப்புகள் வெளிநிறுவனத்திடம் வழங்கப்பட்டு இருந்தது.
தேர்வர்களுக்கு வழங்கப்பட்ட வினாத்தாள்களில் வினாக்களின் தமிழாக்கமும், சரியாக மொழி பெயர்க்கப்படாமல் இருப்பது கண்டறியப்பட்டது.
எனவே தேர்வை ரத்து செய்து, மறுதேதிக்கு ஒத்திவைக்க முடிவு செய்யப்பட்டது. விண்ணப்ப தாரர்களி டம் இருந்து அழைப்புக் கடிதங்கள், ஓ.எம்.ஆர். விடைத் தாள்கள் மற்றும் வினாத்தாள்கள் சேகரிக்கப்பட்டது. உரிய அறிவிப்புடன் தேர்வு பிற்காலத்தில் நடத்தப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.