யார் வயிற்றில் அறுத்துக்கட்ட…?
* பொருளாதாரத்தில் நலிவுற்ற பொதுப் பிரிவினருக்கான 10 சதவிகித இட ஒதுக்கீட்டை அமல்படுத்தவேண்டும்.
– தமிழ்நாடு அரசுக்கு
பிராமணர் சங்கம் வலியுறுத்தல்
>> சூட்சமம் புரிகிறதா? இந்த பத்து சதவிகித இட ஒதுக்கீடு யார் வயிற்றில் அறுத்துக்கட்டப் போகிறது என்பது புரிகிறதா?
திருவள்ளுவர் சிலை என்னாயிற்று?
* உத்தரப்பிரதேச மாநிலம் வாரணாசியில் காசி தமிழ் சங்கத் தொடக்க விழாவில் 15 மொழிகளில் திருக்குறளை வெளியிட்டார் பிரதமர்.
>> உத்தரப்பிரதேசத்திற்குக் கொண்டு சென்ற திருவள்ளுவர் சிலை என்னாயிற்று? அது கிடப்பது எந்தக் குப்பைமேட்டில்?
செய்தியும், சிந்தனையும்….!
Leave a Comment