17.12.2023
டெக்கான் கிரானிக்கல்,அய்தராபாத்
* மோடி கொள்கைகளால் வேலையில்லா திண்டாட்டம், விலைவாசி உயர்வால் தவித்த இளைஞர் களின் கோபம்தான் நாடாளுமன்றத்தில் நடந்த தாக்குதலுக்கு காரணம். – காங்கிரஸ் மேனாள் தலைவர் ராகுல் காந்தி.
* தனது பேச்சை இடை மறித்த பி.ஆர்.எஸ். கட்சி சட்டமன்ற உறுப்பினர்களை பேச அனுமதிக்க சட்டமன்ற தலைவருக்கு தெலங்கானா முதலமைச்சர் ரேவந்த் வேண்டுகோள்.
இந்தியன் எக்ஸ்பிரஸ்
* மத்தியப்பிரதேச காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து கமல்நாத் நீக்கப்பட்டுள்ளார். ஜித்து பட்வாரி புதிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
தி டெலிகிராப்
* அரசியல் அரங்கில் ஹிந்து மயமாக்கல் சமீபத்திய ஆண்டுகளில் பெரிதும் தீவிரமடைந்துள்ளது. அயோத்தியில் உள்ள ராமன் கோயிலின் திறப்பு, இதனை மேலும் பலப்படுத்தப்படும் என்கிறார் வரலாற்று ஆய்வாளர் ராம்சந்திர குகா.
* பள்ளிகளின் பெயர்களின் முன்பாக ’பி.எம்.ஸ்ரீ’ என பெயரிடும் அரசுப் பள்ளிகளுக்கு நிதி உதவி எனும் ஒன்றிய அரசின் திட்டம்; பஞ்சாப் அரசு நிராகரிப்பு. ஆறு மாநிலங்கள் – வங்காளம், தமிழ்நாடு, ஒடிசா, பீகார், டில்லி மற்றும் கேரளா – இந்த திட்டத்தை செயல்படுத்த முடியாது என்று ஏற்கெனவே அறிவித்துள்ளன.
டைம்ஸ் ஆப் இந்தியா
* இந்தியாவில் மதச் சுதந்திரம் கவலை அளிப்பதாக உள்ளது. சில தடைகளை அரசு விதிக்க வேண்டும் என மதச் சுதந்திரத்திற்கான அமெரிக்க கண்காணிப்புக் குழு, அமெரிக்க அரசுக்கு வேண்டுகோள்.
– குடந்தை கருணா
கவனத்திற்குரிய முக்கிய செய்திகள்
Leave a Comment