அரியானா மாநில தேர்தலில் காங்கிரஸ் வெற்றிக்கான வாய்ப்பு அதிகம் கருத்துக் கணிப்பில் வெளியான தகவல்

2 Min Read

புதுடில்லி,டிச.16 அரியானா மாநிலத்தில் அடுத்தாண்டு சட்ட மன்றத் தேர்தல் நடை பெறும் நிலையில், இது தொடர்பான புது கருத் துக்கணிப்பு முடிவுகள் இப்போது வெளியாகி யுள்ளது.

சமீபத்தில் தான் 5 மாநில தேர்தல் முடிவுகள் வெளியாகி இருந்தது. இதில் மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களில் பாஜக ஆட்சியைப் பிடித்தது. அதேநேரம் தெலங் கானா மாநிலத்தில் காங் கிரஸ் வென்று ஆட் சியைப் பிடித்தது.

அரியானா தேர்தல்: இதற்கிடையே அடுத் தாண்டு நடக்கும் அரி யானா மாநிலச் சட்ட மன்றத் தேர்தல் தொடர் பான கருத்துக் கணிப்பு முடிவுகள் இப்போது வெளியாகியுள்ளது. அரியானா என்பது சின்ன மாநிலமாக இருந் தாலும், அது டில்லிக்கு மிக அருகில் இருப்ப தாலும், ஹிந்தி ஹார்ட் லேண்ட்களில் ஒன்றாக இருப்பதாலும் அது ரொம்ப முக்கியத்துவம் பெறுகிறது. இதனால் அங்கே தேர்தல்களிலும் கடும் போட்டியே நிலவு கிறது. இதற்கிடையே அரியானா மாநிலத்தின் சட்டமன்றத் தேர்தல்கள் குறித்த முதற்கட்ட கருத் துக் கணிப்பில் இப்போது ஜன்மத் அமைப்பு வெளியிட்டுள்ளது.

அரியானா மாநிலத் தில் மொத்தம் 90 இடங்கள் இருக்கும் நிலையில், அங்கே பெரும்பான்மையைப் பெற எந்தவொரு கட்சியும் குறைந்தது 46 இடங்களில் வெல்ல வேண்டும். அங்கே பாஜக மற்றும் காங்கிரஸ் இடையே தான் போட்டி நிலவு கிறது. இது தவிர ஜன நாயக ஜனதா கட்சி, இந்தியத் தேசிய லோக் தள் ஆகிய கட்சிகளும் இப்போது களத்தில் உள்ளன.

ஜன்மத் அமைப்பு வெளியிட்டுள்ள கருத் துக் கணிப்பில் காங்கிரஸ் தனிப்பெரும்ப £ன்மையு டன் ஆட்சியைப் பிடிக் கும் என்று அதில் கூறப் பட்டுள்ளது. அங்கே மொத்தமுள்ள 90 இடங் களில் காங்கிரஸ் 48 முதல் 50 இடங்களில் வெல்லும் எனக் கூறப்பட்டுள்ளது. அதேநேரம் தற்போது ஆளும்கட்சியாக இருக்கும் பாஜக 31 முதல் 33 இடங்களில் மட்டுமே வெல்லும் எனக் கூறப்பட் டுள்ளது. அரியானாவில் கடந்த 10 ஆண்டு களாகவே பாஜக தான் ஆட்சியில் இருக்கிறது. கடந்த 2014இல் தனிப் பெரும் பான்மையுடன் பாஜக ஆட்சியை பிடித்த நிலையில், 2019இல் பாஜக கூட்டணிக் கட்சி களின் உதவியுடன் ஆட் சியைப் பிடித்தது. இந்தச் சூழலில் தான் சுமார் 10 ஆண்டுகளுக்குப் பிறகு அங்கே காங்கிரஸ் ஆட்சி அமையும் சூழல் ஏற்பட் டுள்ளதாக ஜன்மத் கருத் துக் கணிப்பில் கூறப் பட்டுள்ளது.

கடந்த 2019இல் நடந்த தேர்தலில் மனோ கர் லால் கட்டார் தலை மையில் பாஜக தேர்தலை எதிர்கொண்டது. அதில் பாஜக 40 இடங்களை வென்ற நிலையில், காங்கிரஸ் 31 இடங்களில் வென்றது. அதன் பிறகு பாஜக ஜனநாயக ஜனதா கட்சி மற்றும் ஏழு சுயேச்சை சட்டமன்ற உறுப்பினர்களின் ஆதர வுடன் ஆட்சி அமைத்தது.

இந்த முறை தேர்தலில் மனோகர் லால் கட்டார் தலைமையிலேயே பாஜக தேர்தலை எதிர்கொள் ளும் என்று எதிர்பார்க்கப் படுகிறது. அதேநேரம் காங்கிரஸ் பூபிந்தர் சிங் தலைமையில் தேர்தலை எதிர்கொள்கிறது. தொடர்ந்து 10 ஆண்டுகள் அரியானாவில் பாஜக ஆட்சியில் இருக்கும் நிலையில், ஆளும் அர சுக்கு எதிராக இருக்கும் மனநிலையைக் காங் கிரஸ் தனக்குச் சாதக மாகப் பயன்படுத்த முய லும் என்பதில் சந்தேகம் இல்லை.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *