புதுடில்லி, டிச.16 இந்த ஆண்டு தொடக்கத்தில் நடந்த கருநாடக சட்ட மன்றத் தேர்தலில் போட் டியிட்ட பாஜக ரூ.196.7 கோடி செலவிட்டுள்ளது.
இது காங்கிரஸ் செல வினமான ரூ.136.90 கோடியை விட 43% அதிக மாகும் என்று தேர்தல் ஆணையத்தின் கட்சி களின் செலவு அறிக் கைகள் தெரிவிக்கின்றன.
மொத்த செலவு ரூ.196.70 கோடியில், பொதுக்கட்சி பிரச்சாரத் துக்கு ரூ.149.36 கோடியும், வேட்பாளர்களுக்கான செலவு ரூ.47.33 கோடியும் என பாஜக அறிவித்தது.
அச்சு, மின்னணு, இணையதளங்கள் மற்றும் தொலைக்காட்சி சேனல்கள் போன்ற விளம்பரங்களுக்காக அக்கட்சி அதிகபட்சமாக 78.10 கோடி ரூபாய் செலவிட்டுள்ளது. 14.12.2023 அன்று தேர்தல் ஆணையத்தால் வெளியிடப்பட்ட அறிக்கையில், தொலைக்காட்சிகள், செய்தித்தாள்கள், முகநூல், கூகுள் மற்றும் வாட்ஸ்அப் ஆகியவற்றுக் கான விளம்பரங்களுக் கான கட்டண விவரங் களும் உள்ளன. நட்சத் திரப் பிரச்சாரகர்கள் மற்றும் பிற தலைவர்களின் பயணச் செலவுகள் பாஜக மாநிலப் பிரிவால் ரூ. 37.64 கோடியும், தலைவர்களின் பயணத்திற்காக மத்திய அலுவலகம் ரூ.8.05 கோடி யும் செலவிட்டுள்ளது.
மற்ற கட்சி வேட் பாளர்களின் குற்றச் செயல்களை விளம்பரப் படுத்தவும் கட்சி 2.93 கோடி ரூபாய் செலவிட் டுள்ளது. மாநிலத் தேர் தலில் வெற்றி பெற்ற காங்கிரஸ் கட்சி, செப் டம்பர் மாதம் தேர்தல் ஆணையத்தால் வெளியிடப்பட்ட செலவின அறிக்கையின்படி, பொதுக் கட்சி பிரச்சாரத் திற்காக மொத்தம் ரூ.136.90 கோடியும், வேட்பாளர் களுக்காக ரூ.45.6 கோடி யும் செலவிட்டுள்ளது. 2018 கருநாடக சட்டமன்ற தேர்தல் பிரச்சாரத்தில், பாஜக 122.68 கோடி ரூபாயும், காங்கிரஸ் 34.48 கோடி ரூபாயும் செல விட்டுள்ளது. 2018 உடன் ஒப்பிடும்போது பாஜக இந்த முறை 60% அதிக மாக செலவழித்தது; காங் கிரஸின் செலவு அய்ந்து ஆண்டுகளுக்கு முன்பு இருந்ததை விட கிட்டத் தட்ட 300% அதிகரித்துள் ளது. மார்ச் 29 முதல் மே 15 வரை “கணிப்பிற்கு” கட்சித் தலைமையகம் ரூ. 5.90 லட்சம் செலவழித் துள்ளது. கருநா டகாவில் மே 10-ஆம் தேதி வாக் குப்பதிவு நடைபெற்று, மே 13-ஆம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டன.
கருநாடக தேர்தல்; ரூ.196 கோடி செலவழித்த பா.ஜ.க. காங்கிரஸை விட 43% அதிகம்
Leave a Comment