நில அளவை விவரங்களை ‘தமிழ்நிலம்’ செயலி மூலம் பார்வையிடலாம்

1 Min Read

அரசியல்

பெரம்பலூர்,அக்.23- தமிழ்நாடு நில அளவை மற்றும் நிலவரித்திட்ட துறை www.tnlandsurvey.tn.gov.in  என்ற இணை யதளத்தை என்.அய்.சி. மூலம் உருவாக் கியுள்ளது. பட்டா மாறுதல் ‘தமிழ்நிலம்’ செல்போன் செயலி இந்த இணைய தளத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.

பொதுமக்கள் எங்கிருந்து வேண்டு மானாலும் பட்டா மாறுதல் விண்ணப் பிக்கும் இணைய வழி சேவை Tamil Nilam Citizen Portal https://tamilnilam.tn.gov.in/citizen/ என்ற இணையதளத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. உட்பிரிவு மற்றும் உட்பிரிவு இல்லாத பட்டா மாறுதல் கோரி வரும் விண்ணப்பங்களை உடனுக்குடன் செயல்படுத்த தமிழ் நிலம் (ஊரகம்) மற்றும் தமிழ்நிலம் (நகரம்) மென்பொருட்கள் உருவாக்கப் பட்டன.

இதனைத் தொடர்ந்து புலப் படங் களிலும் அனைத்து உட்பிரிவு மாற்றங் கள் கொண்டு வர ஏதுவாக கொலாப் லேண்ட் மென்பொருள் உருவாக்கப் பட்டு இந்த இணையதளத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.

பட்டா, சிட்டா பார்வையிட மற்றும் சரிபார்க்க, அ-பதிவேடு, அரசு புறம்போக்கு நில விவரம், புலப்படம், நகர நில அளவை வரைபடங்கள் ஆகிய வற்றை இலவசமாக பார்வையிட, பதிவிறக்கம் மற்றும் பட்டா மாறுதல் விண்ணப்ப நிலை விவரங்களை அறிய எங்கிருந்தும், எந்நேரத்திலும் இணைய வழி சேவை www.eservices.tn.gov.in  இந்த இணையதளத்துடன் இணைக்கப் பட்டுள்ளது.

ஸ்கேன் செய்யப்பட்ட கிராம வரை படங்கள் விற்பனை, தொடர்பு விளக் கப்பட்டியல்கள் விவரங்கள் போன் றவை பதிவிறக்கம் செய்ய வழிவகை செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் உள்ள மாவட்டங்கள், வட்டங்கள், கிராமங்கள், மாநகராட்சிகள், நகராட் சிகளின் விவரங்கள் இத்துறையின் முக்கிய அரசாணைகள், சுற்றறிக்கைகள், பரப்பளவு மற்றம் அளவு மாற்றங்கள் போன்றவற்றை அறியலாம்.

எனவே பொதுமக்கள் மேற்குறிப் பிட்டுள்ள இணையதளம் மற்றும் ‘தமிழ்நிலம்’ செயலி மூலம் நில அளவை தொடர்பான விவரங்களைப் பார்வை யிட்டு பயனடையுமாறு பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் கற்பகம் தெரிவித்துள்ளார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *