விருப்பம் இல்லாமல் பணியாற்ற சென்று தமிழ்நாட்டின் மீது மிகுந்த காதல் கொண்டேன் உச்ச நீதிமன்ற நீதிபதி சஞ்சய் கிஷன் கவுல் உருக்கம்

2 Min Read

புதுடில்லி,டிச.16- சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்து உச்ச நீதிமன்ற நீதிபதியாக பதவி உயர்வு பெற்ற சஞ்சய் கிஷன் கவுல் வருகிற டிச.25ஆம் தேதி பணி ஓய்வு பெறுகிறார். வருகிற 18.12.2023 (திங்கட்கிழமை) முதல் உச்ச நீதிமன்றத்திற்கு குளிர்கால விடுமுறை என்பதால் நேற்று (15.12.2023) அவரது கடைசி பணி நாளாக அமைந்தது. இதை முன்னிட்டு உச்ச நீதிமன்ற பார் சங்கம் சார்பில் நேற்று (15.12.2023) பாராட்டு விழா நடந்தது. இதில் தலைமை நீதிபதி சந்திரசூட் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்ச்சியில் நீதிபதி சஞ்சய் கிஷன் கவுல் பேசியதாவது:

நீதிமன்றங்கள் நீதியின் கோவில்கள் என்று நான் எப்போதும் நம்புகிறேன். மேலும் அவை எப்போது வேண்டுமா னாலும் கதவைத் தட்டுவதற்கு வழக்கு தாரர்களுக்கு திறந்திருக்க வேண்டும். வழக்காடுபவர்கள் சோர்வாகவும் களைப் பாகவும் இருக்கிறார்கள். கடைசி முயற்சி யாக இருக்கும் இந்த உச்ச நீதிமன்றத்தை அவர்கள் அடையும் நேரத்தில் அது திறந்து இருக்க வேண்டும். நீதி கிடைப் பது எல்லா நேரங்களிலும் தடையின்றி இருப்பது உச்ச நீதிமன்றத்தின் பெருமை யாகும். தங்கள் தகராறுகளைத் தீர்ப்பதற் காக இந்த நீதிமன்றத்தை அணுகிய வழக்குரைஞர்கள் எதிர்கொள்ளும் சவால்கள் நீதி வழங்கும்போது நம் மன தில் முதன்மையாக இருக்க வேண்டும்.

ஒரு வழக்குரைஞர் தனது வழக்கின் முடிவை அறிய காலவரையின்றி காத் திருக்க வைக்கக்கூடாது என்று நான் நம்புகிறேன். நீதிபதியாக பெரும்பாலும் சரியான முடிவு கண்டுபிடிக்கப்படுவது இல்லை. ஆனால் ஒரு குறிப்பிட்ட சூழ் நிலையில் சிறந்த முடிவு மட்டுமே உள் ளது. ஒரு முடிவெடுப்பதற்கு உங்களுக் குள் தைரியத்தையும் நம்பிக்கையையும் கண்டுபிடிக்க வேண்டும். ஒருமுறை நீங் கள் முடிவு செய்தால், திரும்பிப் பார்க் காதீர்கள். சென்னை உயர் நீதிமன் றத்துக்கு தலைமை நீதிபதியாக மாற்றப் பட்ட செய்தியை கேட்டதும் எனக்கு மகிழ்ச்சி இல்லை.

ஆனால், சென்னை உயர் நீதிமன்றத் தின் தலைமை நீதிபதியாக நான் பணியாற்றிய காலம் எனது நீதித்துறை வாழ்க்கையின் மிகவும் நிறைவான காலமாக அமைந்தது,. தமிழ்நாட்டு மக்களின் பொதுவான மனப்பான்மை மிகுந்த பணிவு மற்றும் ஏற்றுக்கொள் ளும் தன்மை கொண்டது. நான் தயக்கத் துடன் சென்னைக்குச் சென்றேன். ஆனால் இறுதியில் தமிழ்நாட்டின் மீது காதல் கொண்டேன். அங்கு நான் மிகவும் நீடித்த நட்பைக் கண்டேன். அதை இன்றும் நான் தொடர்ந்து போற்றி வருகிறேன்.

-இவ்வாறு அவர் உருக்கமாக பேசினார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *