கோட்டயம், டிச.15 நிதி ஒதுக்கும் போது ஒன்றிய அரசு பாரபட்சம் காட்டுவதாக கூறி கேரள அரசு உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது.
இதுகுறித்து கேரள முதல மைச்சர் பினராயி விஜயன் கூறிய தாவது: நிதி ஒதுக்கீடு செய்யும் போது தென் மாநிலங்களைப் புறக்கணிக்கும் வகையில் ஒன்றிய அரசு செயல்படுகிறது. ஒன்றிய அரசின் இந்த செயல், கேரளா போன்ற தென் மாநிலங்களை நிதி நெருக்கடிக்கு ஆளாக்கியுள்ளது. அரசியல் சாசனத்துக்கு விரோத மான வகையில் பாரபட்சமான இதுபோன்ற நடவடிக்கைகளை கைவிடக்கோரி ஒன்றிய அரசிடம் பலமுறை வலியுறுத்தியபோதும், பழிவாங்கும் நடவடிக்கைகளை அது நிறுத்தவில்லை. மாறாக தீவிரப்படுத்தியுள்ளது.
இந்திய அரசமைப்பின் கூட் டாட்சிக் கொள்கைகளை புறக் கணித்து கேரளாவை இக் கட் டான சூழலில் தள்ளும் ஒன்றிய அரசின் இந்த பாரபட்சமான நடவடிக்கைகளுக்கு எதிராக மாநில அரசு உச்ச நீதிமன்றத்தை தற்போது நாடியுள்ளது. ஒன்றிய மாநில தகராறுகளைப் தீர்ப்பதைக் கையாளும் அரசமைப்பின் 131-ஆவது பிரிவின் கீழ் உச்ச நீதி மன்றத்திடம் உத்தரவு பெறுவதை முக்கிய நோக்கமாகக் கொண்டே இந்த சட்டப் போராட்டத்தை கேரளா தொடங்கியுள்ளது.இவ் வாறு அவர் தெரிவித்தார்.
மணிப்பூர் கலவரத்தில் பலியான
64 பேரின் உடல்கள் உறவினர்களிடம் ஒப்படைப்பு
புதுடில்லி,டிச.15- மணிப்பூரில் பெரும்பான்மையாக வசிக்கும் மெய்டீஸ் சமூகத்தினருக்கும், சிறுபான்மையாக வசிக்கும் குக்கி, நாகா பழங்குடியின மக்களுக்கும் இடையே கடந்த மே 3ஆம் தேதி கலவரம் வெடித்தது. இதில் 180க்கும் மேற்பட்டோர் உயிரிழந் தனர். ஏராளமானோர் படுகாய மடைந்தனர்.
இதில் 64 பேரின் உடல்கள் அவர்களின் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டன.