புதுடில்லி, டிச.15 இந்தியாவில் 2021 ஆம் ஆண்டில் 74.1 சதவீத மக்கள் ஆரோக்கிய மான உணவுப் பொருட்களை வாங்க முடியாத நிலையில் உள்ளனர். இதற்குக் காரணம் அவர்கள் வாங்கும் ஊதியத் திற்கும் விலைவாசி உயர்விற்கும் சிறிதும் தொடர்பில்லாததுதான். விலைவாசி தொடர்ந்து அதிகரித்தால் இன்னும் அதிகமான மக்கள் ஆரோக்கியமான உணவுகளை சாப்பிட முடியாத நிலை ஏற்படலாம் என அய்க்கிய நாடுகளின் உணவு மற்றும் வேளாண்மை அமைப்பு உணவுப் பாதுகாப்பு மற்றும் ஊட்டச்சத்து (2023) தொடர்பான அறிக்கை ஒன்றை அண்மையில் வெளியிட்டுள்ளது.
அந்த அறிக்கையின் அம்சங்கள் வருமாறு:
கரோனா பாதிப்பு மற்றும் அதன் நெருக்கடியின்போது உணவு, தீவனங் கள், எரிபொருள், உரங்கள் மற்றும் நிதி (“5திs” நெருக்கடி) ஆகியவற்றில் இந்தியா கடும் நெருக்கடியைச் சந்தித்தது. ஆண் களை விட அதிகமான பெண்கள் உண வுப் பற்றாக்குறைக்கு உள்ளாகியுள்ளனர். அய்ந்து வயதிற்குட்பட்ட குழந்தைகளின் வளர்ச்சி குன்றியுள்ளது. உடல் எடை குறைவு மற்றும் அதிக எடை, இனப் பெருக்க வயதுடைய பெண்களிடையே ஏற்பட்டுள்ள இரத்தச் சோகை ஆகிய வற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இது உலக சுகாதார சபையின் உலகளாவிய ஊட்டச்சத்து இலக்கை மீறிவிட்டது.
நாட்டின் மக்கள் தொகையில் 16.6 சதவீதம் பேர் ஊட்டச்சத்து குறைபாட்டு டன் உள்ளனர். 18.7 சதவீதம் குழந்தைகள் எடை குறைவாகப் பிறக்கின்றனர். நேபா ளத்திற்கு அடுத்தபடியாக இந்தியாவில் குறைந்த எடையுடன் குழந்தைகள் பிறப்பு அதிகமாக உள்ளது. அய்ந்து வயதுக்குட் பட்ட குழந்தைகளில் 2.8 சதவீதக் குழந் தைகள் அதிக எடை கொண்டவர்களாக உள்ளனர்.
அதிக எடையும் உடல் நலத் திற்கு ஆபத்தானது தான். 31.7 சதவீதம் குழந்தைகள் வளர்ச்சி குன்றிய நிலையில் உள்ளனர். நாட்டின் 15 முதல் 49 வயதுக் குட்பட்ட பெண்களில் 53 சதவீதம் பேர் இரத்தச் சோகையால் பாதிக்கப்பட்டுள் ளனர்,
இது பெண்களின் ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்வைப் பாதிக்கிறது. இந்தப் பாதிப்பு அவர்களுக்குப் பிறக்கும் குழந் தைகளையும் பாதிக்கிறது. நாட்டில் பெரிய வர்களில் 1.6 சதவீதம் பேர் பருமனாக உள்ளனர். இதில் ஒரு நல்ல அம்சம் என்னவென்றால் 0-5 மாத குழந்தை களுக்கு தாய்ப்பால் கொடுப்பதில், இந்தியா 63.7 சதவீதத்துடன் முன்னணி யில் உள்ளது. உலகளாவிய பசிக் குறியீடு சமீபத்தில் இதே போன்ற புள்ளிவிவரங் களைக் கொடுத்தது. இது தவறானது என்று கூறி அந்தத் தரவுகளை ஒன்றிய பாஜக அரசு மறுத்துவிட்டது. ஆனால் அய்க்கிய நாடுகளின் உணவு மற்றும் விவசாய அமைப்பு அதன் உறுப்பு நாடுகளுடன் நெருங்கியத் தொடர்பில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.