கள்ளக்குறிச்சி,டிச.15- ‘வயதான பெற்றோர்களை பிள்ளைகள் பேணிக் காத்திட வேண்டும்’ என கூடுதல் மாவட்ட நீதிபதி பேசினார்.
கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட ரங்கில், பெற்றோர், முதியோர் பராமரிப்பு மற்றும் நல் வாழ்வு சட்டம் குறித்த துறை சார்ந்த அலுவலர்களுக்கான பயிற்சி அளிக்கப்பட்டது. பயிற்சியில் கூடுதல் மாவட்ட நீதிபதி கீதாராணி தலைமை தாங்கி பேசியதாவது:
மூத்த குடிமக்களை பராமரிப்பது, அவர்களின் குழந் தைகள் மற்றும் சட்டப்பூர்வ வாரிசுகளின் கடமை யாகும். உடல்நலம், மனநலம் மற்றும் சொத்துகள் தொடர்பான பிரச்சினை களுக்கு பராமரிப்பு தீர்ப்பாயங்கள் மூலம் நிவாரணம் பெற இச்சட்டம் வழிவகை செய்கிறது. பரா மரிக்கப் படாமல் பாதிக்கப்பட்ட அனைத்து மூத்த குடி மக்களும் இச்சட்டத்தின் கீழ் அமைக்கப்பட்டுள்ள பராமரிப்பு தீர்ப்பாயங்களுக்கு மனு அளித்து அதிக பட்சமாக 10 ஆயிரம் ரூபாய் வரை வாழ்வூதியம் பெறலாம்.
பராமரிப்பு மற்றும் பாதுகாப்பு வழங்கக்கூடிய பொறுப்பில் உள்ள வர்கள் மூத்த குடிமக்களை கை விட்டால் அவர்களுக்கு 3 மாதம் சிறை தண்டனை அல்லது 5,000 ரூபாய் அபராதம் அல்லது இரண்டும் அளிக் கப்படும். என்னைப் பொறுத்தவரை இச்சட்டத்தை பயன்படுத்தப் படாத அளவிற்கு தங்கள் வீட்டு முதியோர்கள், பெற் றோர்களை, அவர்களது மகன்கள், மகள்கள், உறவினர்கள் முறையாக பேணிக்காத்திட வேண் டும். -இவ்வாறு நீதிபதி கீதாராணி பேசினார்.
மாவட்ட வருவாய்த்துறை அலு வலர் சத்திய நாராயணன், மாவட்ட சமூக நல அலுவலர் தீபிகா, கள்ளக் குறிச்சி கோட்டாட்சியர் (பொறுப்பு) கிருஷ்ணன், திருக்கோவிலூர் கோட் டாட்சியர் கண்ணன், மாவட்ட தொற்றா நோய் அலுவலர் ராஜேஷ், வழக்குரைஞர்கள், முதியோர் தொண்டு நிறுவனத்தினர் மற்றும் அரசு அலுவலர்கள் பங்கேற்றனர்.