100 நாள் வேலைத் திட்டம் தமிழ்நாட்டுக்கான நிலுவைத் தொகை எவ்வளவு? மக்களவையில் கனிமொழி கருணாநிதி கேள்வி

viduthalai
2 Min Read

புதுடில்லி, டிச. 14– “நாடு முழு வதும் செயல்படுத்தப் படும் மகாத்மா காந்தி ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் (100 நாள் வேலைத் திட்டம்) பயனாளிகளுக்கு வழங்க வேண்டிய ஊதிய நிலு வைத் தொகை மற்றும் இத்திட்டத்துக்கான உபகரணங்களுக்கான நிலுவைத் தொகை ஒவ் வொரு மாநில வாரியாக விவரம் தேவை. குறிப்பாக தூத்துக்குடி மாவட்டத்தில் ஊதிய நிலுவைத் தொகை எவ்வளவு உள்ளது?

இத்திட்டத்துக்காக ஒதுக்கப்பட்ட நிதி 2023 அக்டோபர் மாத நில வரப்படி முழுமையாக செல விடப்பட்டு விட்டதா?

அப்படியென்றால் அடுத்தடுத்த நிதி ஒதுக் கீடுகள் உரிய நேரத்தில் பயனாளிகளுக்கு கிடைக்க மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் என்ன?
இத்திட்டத்தின் கீழ் பயனாளிகளுக்கு நிலு வைத் தொகை வைக்கப் படும்போது அதுபற்றி அவர்களுக்கு முறைப்படி தெரிவிக்கப்படுகிறதா? நிலுவைத் தொகை பற்றி இத்திட்டத்தின் பயனா ளிகளுக்கு எவ்விதத்தில் தெரிவிக்கப்படுகிறது?” என்ற கேள்விகளை தி.மு.க. துணைப் பொதுச் செய லாளரும், மக்களவை திமுக துணைத் தலைவரு மான கனிமொழி கருணா நிதி எழுத்துப்பூர்வமாக டிசம்பர் 5 ஆம் தேதி எழுப்பியிருந்தார்.
இதற்கு ஒன்றிய ஊரக வளர்ச்சித் துறை இணை அமைச்சர் சாத்வி நிரஞ்சன் ஜோதி அளித்துள்ள பதிலில் கூறப்பட்டிருப்ப தாவது:-

“மகாத்மா காந்தி ஊரக வேலை உறுதித் திட்டம் என்பது அந்தந்த பகுதிகளில் தேவைக் கேற்ப செயல்படுத்தப் பட்டு வரும் திட்டமாகும். இத்திட்டத்துக்கான நிதி ஒதுக்கீடு என்பது தொடர் நடவடிக்கை.

இத்திட்டத்துக்காக ஒன்றிய அரசுஊதிய நிதி யையும், உபகரணங்களுக் கான நிதியையும், நிர்வாக நிதியையும் மாநில அரசு களுக்கு ஒதுக்குகிறது. மாநில அரசுகள் மூல மாக மாவட்ட நிர்வாகங் களுக்கு நிதிசெல்கிறது. மாவட்டங்களுக்கு நேரடியாக ஒன்றிய அரசு நிதி ஒதுக்குவதில்லை.
2023 அக்டோபர் மாதப்படி ஒதுக்கப்பட்ட நிதி இன்னமும் முழுமை யாக செலவிடப்பட வில்லை.

29.-11.-2023 தேதி வரையிலான இத்திட்டத்துக் கான நிலுவையில் இருக் கும் நிதி பற்றிய மாநில வாரியான விவரங்கள் அரசிடம் உள்ளன.
அதன்படி தமிழ்நாட்டுக்கு இத்திட்டத்துக் கான ஊதிய நிலுவைத் தொகை 261 கோடியே 85 லட்சத்து 91 ஆயிரம் ரூபாயாக இருக்கிறது.
தமிழ்நாட்டுக்கான உபகரண நிலுவைத் தொகை (material funds) 106 கோடியே 22 லட் சத்து 48 ஆயிரம் ரூபா யாக இருக்கிறது.

மகாத்மா காந்தி ஊரக வேலை உறுதித் திட்டத்தின் பயனாளிகள் பணியாற்றிய 15 நாட் களுக்குள் ஊதியம் பெற தகுதி பெற்றவர்கள். இத் திட்டத்தில் பணியாற்றுப வர் தனக்கு சேர வேண் டிய ஊதிய நிலுவைத் தொகை எவ்வளவு இருக் கிறது என்பதை சம்பந்தப் பட்ட கிராமப் பஞ்சாயத்து அலுவல கத்தில் இதெற்கன வைக்கப்பட் டிருக்கும் பதிவேட்டு அறிக்கை மூலமாக அறிய லாம். மேலும் இத்திட் டத்தின் பயனாளிகள் தங்களது ஸ்மார்ட் போனில் Janmanrega App என்ற செயலியை பதிவிறக்கி அதில் தங்க ளது வேலை எண்ணைப் பதிவு செய்து தங்களுக் கான ஊதிய நிலுவைத் தொகை விவரங்களை அறிய முடியும்” என்று ஒன்றிய ஊரக வளர்ச்சித் துறை இணை அமைச்சர் பதிலளித்துள்ளார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *