புதுக்கோட்டை, டிச.14- அதிகமான மாணவர்களை விஞ்ஞானிகளாக உருவாக்க வேண்டும் என்று மாநில பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறினார்.
புதுக்கோட்டையில் ‘ஒவ் வொரு குழந்தையும் ஒரு விஞ்ஞானி’ என்ற பயிற்சித் திட்டம் 11.12.2023 நடைபெற்றது.
இதனை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தொடங்கி வைத்து பேசியது: ஆசிரியர்களிட மிருந்து மாணவர்கள் கற்றுக் கொள்கிறார்களா, மாணவர் களிடமிருந்து ஆசிரியர்கள் கற்றுக் கொள்கிறார்களா என்ற நிலை இருக்கிறது. அந்தளவுக்கு கிராமப் புற மாணவர்களும் அறிவுத் திறனுடன் இருக்கிறார்கள்.
இந்த நிலையில்தான் ஒவ்வொரு குழந்தையும் ஒரு விஞ்ஞானி என்ற திட்டம் தொடங்கப்படுகிறது. ஒவ் வொரு மாணவர்களையும் சர்.சி.வி. ராமன்களாக உருவாக்க வேண்டும். அதிக மாணவர்களை விஞ்ஞானி களாக உருவாக்க வேண்டும்.
நமது கண்டுபிடிப்புகளுக்கு காப்புரிமை பெறும் விழிப்பு ணர்வை ஏற்படுத்த வேண்டும். சீன நாட்டிலிருந்து ஆண்டுக்கு 43 ஆயிரம் கண்டுபிடிப்புகளுக்கு காப்புரிமை பெறப்படுகிறது. ஆனால், நம் நாட்டிலிருந்து ஆண்டுக்கு 2 ஆயிரம் காப்புரிமை கள்தான் பதிவு செய்யப்படுகிறது. காப்புரிமை பெறும் வழிமுறைகள் குறித்தும் விழிப்புணர்வை ஏற்ப டுத்த வேண்டும். பள்ளிக் கல்வித் துறையின் மூலம் மணற்கேணி என்ற செயலி தற்போது பயன் பாட்டில் இருக்கிறது. அந்தச் செயலிக்கு அறிவுசார் பங்க ளிப்பைச் செய்ய எம்.எஸ். சுவாமி நாதன் ஆராய்ச்சி நிறுவனத்தையும் இணைத்துக் கொள்ளத் தயாராக இருக்கிறோம். இவ்வாறு அவர் பேசினார்.
விழாவில், ஆராய்ச்சி நிறுவனத் தின் செயல் இயக்குநர் ஜி.என்.ஹரிஹரன், பைப் ஸ்டார் நிதி நிறு வனத்தின் தலைமை நிதி அலுவலர் சிறீகாந்த் கோபால கிருஷ்ணன், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் மா.மஞ்சுளா, கவிஞர் தங்கம் மூர்த்தி உள்ளிட்டோர் பேசினர். முன்னதாக சூழலியல் துறை இயக்குநர் ஆர்.ரெங்க லட்சுமி வரவேற்றார். முதன்மை விஞ் ஞானி ஆர்.ராஜ்குமார் நன்றி கூறினார்.