புதுக்கோட்டை,டிச.14- எல்லை தாண்டி மீன்பிடித்த தாக புதுகை மீனவர்கள் 6 பேரை இலங்கை கடற் படையினர் நேற்று (13.12.2023) மாலை சிறைபிடித்து கைது செய்தனர்.
புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாப்பட்டி னத்தை சேர்ந்த மீனவர்கள் நரேஷ் (27), ஆனந்தபாபு (25), அஜய் (24), நந்தகுமார் (28), அஜித் (26), குமார் (32) ஆகிய 6 பேர் ஒரு விசைப் படகில் ஜெகதாப்பட்டினம் மீன்பிடி தளத்தில் இருந்து நேற்று மதியம் மீன்பிடிக்க சென்றனர்.
நெடுந்தீவு அருகே மாலை மீன்பிடித்து கொண்டி ருந்த போது, அந்த வழியாக வந்த இலங்கை கடற் படையினர், எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி விசைப் படகை சுற்றி வளைத்தனர். பின்னர் படகில் இருந்த 6 பேரையும் கைது செய்து படகுடன் இலங்கை காங் கேசன் துறை கடற்படை முகாமுக்கு அழைத்து சென்று தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.
கடந்த சில தினங்களுக்கு முன்புதான் நாகை, காரைக் கால் மீனவர்கள் 25 பேர் சிறை பிடிக்கப்பட்டனர். தற்போது புதுகை மீனவர்கள் 6 பேர் சிறைபிடிக்கப் பட்டுள்ளது சக மீனவர்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.