பெங்களூரு,டிச.14- கருநாடக சட்டமன்ற தேர்தலில் படுதோல் வியைச் சந்தித்த மேனாள் பிரதமர் தேவகவுடாவின் மதச்சார்பற்ற ஜனதா தளம் (ஜேடிஎஸ்), காங் கிரஸ் கட்சியை எதிர்ப்பதாக கூறி பா.ஜ.க. கூட்டணியில் இணைந்தது.
“மதச்சார்பற்ற” ஜனதா தளம் என கட்சியின் பெயரை வைத்துக் கொண்டு பாஜக கூட்டணியில் இணைவதா என எதிர்ப்பு தெரிவித்தும், கூட்டணி முடிவை பரிசீலனை செய்யுமாறும் மேனாள் ஒன்றிய அமைச்சரும், ஜேடிஎஸ் கருநாடக மாநில தலைவருமான சி.எம்.இப்ராஹிம், தேசிய தலைவர் தேவகவுடாவிடம் கோரிக்கை விடுத்தார்.
ஆனால் தேவகவுடா, சி.எம்.இப்ராஹிம், தேசிய துணை தலை வர் சி.கே.நாணு உள்ளிட்ட பாஜக கூட்டணிக்கு எதிரானவர் களை கட்சியில் இருந்து நீக்கி, ஜேடிஎஸ் கருநாடக மாநில தலைவராக தனது மகனும், மேனாள் முதலமைச் சருமான எச்.டி. குமாரசாமியை நியமிப்பதாக ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் அறிவித்தார்.
உடைந்தது ஜேடிஎஸ்
இந்நிலையில் ஞாயிறன்று மேனாள் பிரதமர் தேவகவுடா தலை மையில் ஜேடிஎஸ் தேசிய செயற் குழு கூட்டம் பெங்களூரில் நடை பெற்றது. இந்த கூட்டத்தில் பாஜக வுடன் கூட்டணி அமைத்து போட்டி யிட ஒப்புதல் பெறப்பட்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்ட நிலையில், இதற்கு போட்டியாக திங்களன்று பெங்களூரில் சி.எம்.இப்ராஹிம் தலைமையில் தேசிய செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இதில் கருநாடகம் மட்டுமின்றி நாடு முழுவதிலும் இருந்து ஜேடிஎஸ் முக்கியத் தலைவர்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சி யின் தேசியத் தலைவர் பதவியில் இருந்து தேவகவுடாவை நீக்கி, கேரள மேனாள் அமைச் சர் சி.கே.நாணுவை அந்த பதவி யில் நியமிக்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள் ளதாக சி.எம்.இப்ராஹிம் தெரிவித்தார்.
“இந்தியா” கூட்டணியில்…
“எங்களின் மதச்சார்பற்ற ஜனதா தளம் தான் உண்மையா னது. நெல் சுமந்து செல்லும் விவசாயி பெண் ணின் சின்னத்தை மீட்டெடுக்க தேர்தல் ஆணையத் தில் முறையிடுவோம். “இந்தியா” கூட்டணியில் இணைந்து நாட்டின் பாதுகாப் புக்காக போராடுவோம். ஜனவரி மாதம் ஹுப்பள்ளியில் தேசிய மாநாட்டை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இம்மாநாட் டிற்கு “இந்தியா” கூட்டணி தலை வர்களை அழைப்போம்” எனவும் சி.எம்.இப்ராஹிம் கூறினார்.
5 சட்டமன்ற உறுப்பினர்கள் தாவல்: அதிர்ச்சியில் குமாரசாமி
பா.ஜ.க.வுடனான கூட்டணி யால் மதச்சார்பற்ற ஜனதாதளம் தேவ கவுடா – சி.எம்.இப்ராஹிம் என இரண்டு அணியாக உடைந் துள்ள நிலையில், சி.எம்.இப்ராஹிம் அணி, தனது பக்கம் 5 சட்டமன்ற உறுப்பினர்கள் இருப்பதாகவும், தொடர்பில் உள்ள மேலும் சில சட்டமன்ற உறுப்பினர்கள் எங்கள் அணிக்குள் வந்தவுடன், மொத்த சட்டமன்ற உறுப்பினர்களின் (10) விபரம் வெளியிடப்படும் எனவும் கூறியுள்ளார்.
மதச்சார்பற்ற ஜனதாதளத்திற்கு 19 சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ள நிலயில், 5 சட்டமன்ற உறுப் பினர்களுடன் தங்கள் பக்கம் இருப்பதாக சி.எம். இப்ராஹிமின் இந்த அறிவிப்பு குமாரசாமியை கடும் அதிர்ச்சி யில் ஆழ்த்தியுள்ளது. காரணம், திங்களன்று காங்கிரஸ் அமைச்சர் ஒருவர் பாஜகவுடன் தொடர்பில் இருப்பதாகவும், 60 சட்டமன்ற உறுப்பினர்களுடன் பா.ஜ.க.வில் இணைந்து மகாராட் டிரா போல கருநாடகாவில் காங்கிரஸ் ஆட்சி கவிழும் எனவும் குமாரசாமி கூறியிருந்த நிலையில், தனது கட்சி இரண்டாக உடைக்கப்பட்டு 10-க்கும் மேற் பட்ட சட்டமன்ற உறுப்பினர்கள் ஆதரவு இருப்பதாக சி.எம்.இப்ராஹிம் கூறியுள்ளது கடும் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளன.