புதுடில்லி,டிச.14- தெலங்கானாவில் மத்திய பழங்குடியினர் பல்கலைக்கழகம் அமைப் பதற்கான மசோதா நாடாளு மன்றத்தில் நிறைவேற்றப்பட் டுள்ளது.
‘மத்திய பல்கலைக்கழகங்கள் (திருத்த) மசோதா-2023’ எனும் இந்த மசோதாவுக்கு மக்களவை கடந்த வாரம் ஒப்புதல் அளித்த நிலையில், மாநிலங்களவையில் 13.12.2023 அன்று குரல் வாக் கெடுப்பு மூலம் நிறைவேற்றப் பட்டது. அப்போது, எதிர்க் கட்சி உறுப்பினர்கள் யாரும் அவையில் இல்லை.
மக்களவைக்குள் 2 பேர் அத்துமீறி நுழைந்த சம்பவம் தொடர்பாக ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா விளக்க மளிக்க வலியுறுத்தி, எதிர்க்கட்சி உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்துவிட்டனர்.
தெலங்கானாவில் ‘சம்மக்கா, சரக்கா’ என்ற பழங்குடியின பெண் தெய்வங்களின் பெயரில் பழங்குடியினர் பல்கலைக்கழகம் அமையவுள்ளது.
முன்னதாக, மசோதா மீது நடைபெற்ற விவாதத்துக்கு பதிலளித்துப் பேசிய ஒன்றிய கல்வித் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான், ‘ஆந்திர மறுசீரமைப்புச் சட்டம்-2014இன்கீழ் தெலங்கானாவுக்கு அளிக்கப்பட்ட உறுதிமொழியின்படி இப்பல்கலைக்கழகம் அமைக்கப்படுகிறது. குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளித்ததும் அனைத்து நடைமுறைகளும் தொடங்கப்படும்’ என்றார்.
மேலும், அய்அய்டி, அய்அய்எம் மற்றும் மத்தியப் பல்கலைக்கழகங்களில் பட்டி யல் இனத்தவர் (எஸ்சி), பழங் குடியினர் (எஸ்டி) மற்றும் இதர பிற்படுத்தப்பட்ட பிரிவை (ஓபிசி) சேர்ந்த மாணவர்களின் இடைநிற்றல் விகிதம் குறித்து சில உறுப்பினர்கள் கவலை தெரிவித்திருந்த நிலையில், ‘இத்தகைய கல்வி நிலையங்களில் மாணவர்கள் விலகுவதற்கு வேறு சிறப்பான வாய்ப்புகள் கிடைப்பதும் ஒரு காரணம். அய்அய்டி-களில் கடந்த 5 ஆண்டுகளில் சேர்க்கை பெற்ற பொதுப் பிரிவு மாணவர்களின் எண்ணிக்கை 2.66 லட்சம். இதில் 4,081 பேர் இடைநின்றனர். இது 1.53 சதவீதமாகும். ஓபிசி, எஸ்சி, எஸ்டி பிரிவினரைப் பொறுத்தவரை இந்த விகி தங்கள் முறையே 1.5, 1.47, 1.29 சதவீதமாக உள்ளது.
நாட்டில் உயர்க்கல்வியில் சேரும் மாணவர்களின் எண் ணிக்கை குறைந்துள்ளதாக சில எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தெரிவித்த குற்றச்சாட்டில் உண் மையில்லை. கடந்த 2014_-2015ஆம் ஆண்டை ஒப்பிடுகை யில், 2021-_2022ஆம் ஆண்டில் மாணவர் சேர்க்கை 26 சதவீதம் அதிகரித்துள்ளது’ என்றார்.