போபால், டிச. 13- மத்தியப்பிரதேசத் தில் 3-ஆவது முறை பெருவெற்றியை தேடித்தந்த தனக்கே முதலமைச்சர் பதவி கிடைக்கும் என்று கடைசி வரை காத்திருந்த சிவ்ராஜ் சிங் சவுகானை ஓரங்கட்டிவிட்டதால் மிகவும் மனம் நொந்த நிலையில் இருந்த சிவ்ராஜ்சிங் சவுகான் தான் இனிமேல் எவுதும் மேலிடத்தில் கேட்பதை விட செத்துப்போவதே மேல் என்று கூறியுள்ளார்.
மத்தியப் பிரதேசத்தில் கடந்த மாதம் 17ஆம் தேதி நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் மொத்தமுள்ள 230 தொகுதிகளில் பா.ஜ.க. 163 தொகுதிகளில் வெற்றி பெற்றது. முதலமைச்சராக இருந்த சிவ்ராஜ் சிங் சவுகான் மாநிலம் முழுவதும் தீவிர தேர்தல் பிரச்சா ரம் மேற்கொண்டார். கடந்த முறை பெற்ற வெற்றியைவிட இம்முறை மிகப் பெரிய வெற்றி பெற்றதை அடுத்து, சிவ்ராஜ் சிங் சவுகான் மீண்டும் முதலமைச்சராக தேர்வு செய்யப்படுவார் என பரவ லான எதிர்பார்ப்பு இருந்தது.
இந்நிலையில், 11.12.2023 அன்று நடைபெற்ற மத்தியப் பிரதேச பாஜக சட்டமன்ற உறுப்பினர்க ளின் கூட்டத்தில், முதலமைச்சராக மோகன் யாதவ் தேர்வு செய்யப் பட்டார். இதையடுத்து, சிவ்ராஜ் சிங் சவுகானின் ஆதரவாளர்கள் சோகத்தில் மூழ்கினர். பெண்கள் பலர் சிவ்ராஜ் சிங் சவுகானை சந் தித்து கதறி அழுதனர். இதனிடையே, செய்தியாளர்களிடம் பேசிய சிவ் ராஜ் சிங் சவுகான் கூறியது:
‘ஒரு விஷயத்தை நான் வெளிப் படையாகவும் பணிவாகவும் தெரி விக்க விரும்புகிறேன். எனக்காகவும் எதையாவது கேட்பதைவிட செத் துப்போவதே மேல். எதன் காரண மாகவும் நான் டில்லி செல்ல மாட் டேன். பா.ஜ.க. மீண்டும் ஒருமுறை வெற்றி பெற்று ஆட்சி அமைக்க உள் ளது. அந்த வகையில் 2023 தேர்தல் எனக்கு மிகவும் திருப்தி அளிக்கிறது. மகிழ்ச்சி மற்றும் திருப்தியால் என் மனம் நிறைந்திருக்கிறது” என்று சிவ் ராஜ் சிங் சவுகான் தெரிவித்துள்ளார்.