புதுடில்லி, டிச.13 ‘‘ஒன்றிய அமைச்சர் அமித் ஷாவுக்கு வரலாறு தெரியாது. வரலாற்றை அவர் மாற்றி எழுதி வருகிறார்’’ என்று காங் கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி தெரிவித்தார்.
ஜம்மு-காஷ்மீருக்கு சிறப்புத் தகுதி வழங்கிய அரசமைப்பு சட்டத்தின் 370 ஆவது பிரிவை ஒன்றிய அரசு ரத்து செய்தது செல்லும் என உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
இதனை வரவேற்று மாநிலங்களவையில் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷா நேற்றுமுன்தினம் பேசும்போது, “1948 இல் பாகிஸ்தானிய ஆக்கிரமிப்பாளர்களிடம் இருந்து ஜம்மு காஷ்மீர் முழுவதையும் திரும்பப் பெறாமல் அய்.நா.வின் போர் நிறுத் தத்தை அப்போதைய பிரதமர் ஜவகர்லால் நேரு ஏற்றுக்கொண்டது தவறு” என்றார்.
இதற்கு முன் கடந்த 6 ஆம் தேதி மக்கள வையில் ஒன்றிய அமைச்சர் அமித் ஷா பேசும்போது, “மேனாள் பிரதமர் ஜவஹர்லால் நேரு செய்த இரு தவறுகளால் காஷ்மீர் மக்கள் பல ஆண்டுகளாக பாதிக்கப்பட்டனர். நேரு சரி யான நடவடிக்கை எடுத்திருந்தால் ஆக்கிர மிப்பு காஷ்மீர் இந்தியாவின் ஒரு பகுதியாக இருந்திருக்கும்” என்றார்.
இதுகுறித்து ராகுல் காந்தி நேற்று (12.12.2023) கூறும்போது, “பண்டித நேருதனது வாழ்நாளை இந்த நாட்டுக்காக அர்ப்பணித்தவர். அவர் பலஆண்டுகள் சிறையில் இருந்துள்ளார். அமித் ஷாவுக்கு வரலாறு தெரியாது. அவர் வரலாற்றை மாற்றி எழுதுவதால் அவருக்கு வரலாறு தெரிந்திருக்கும் என நான் எதிர்பார்க்க வில்லை” என்றார்.
வரலாறு தெரியாத உள்துறை அமைச்சர் அமித் ஷா: ராகுல் காந்தி விமர்சனம்
Leave a Comment