ரங்கநாதர் என்ன செய்து கொண்டு இருந்தாராம்?
திருச்சி, டிச.13- திருச்சி சிறீரங்கம் ரெங்கநாதர் கோவிலுக்கு ஆந்திர மாநிலம் நெல்லூர் மாவட்டத்தில் இருந்து, 30-க்கும் மேற்பட்ட அய்யப்ப பக்தர்கள் நேற்று சாமி தரிசனம் செய்ய வந்தனர்.
பின்னர் அவர்கள் கோவிலில் நீண்ட வரி சையில் காத்திருந்தனர். அப்போது ஆந்திர அய்யப்ப பக்தர்கள் சிலரும் தரிசனம் செய்ய வந்தனர்.
ஆந்திர பக்தர்கள் வரிசையில் நிற்காமல் இடையே அத்துமீறி நுழைந்ததாக தெரி கிறது. சிலர் தடுப்பு கம்பியை தாண்டி குதித் தனர். இதனால் மற்ற பக்தர்கள் முகம் சுழிக் கும் நிலை ஏற்பட்டது.
இதனால் மற்ற பக்தர்கள் கோவில் காவலாளிகளிடம் புகார் கூறினர். பின்னர் கருவறைக்கு முன்புறமுள்ள காயத்ரி மண்ட பத்தில் ஆந்திர பக்தர்கள் நின்று கொண் டிருந்தபோது நெரிசல் ஏற்பட்டதாகத் தெரி கிறது.
காவலாளிகள் அதை சரிசெய்ய முயன்றனர். அப்போது வரிசையில் நின்ற ஆந்திர பக்தர் சென்னா ராவ் என்பவருக்கும், கோவில் காவலாளிகளுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர் அது கைகலப்பாக மாறியது.
இதில் அய்யப்ப பக்தர் சென்னாராவின் மூக்கு உடைபட்டு ரத்தம் கொட்டியது. இத னால் அதிர்ச்சி அடைந்த நபர் ரத்தத்தை துடைத்து கொண்டு தரையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதைப் பார்த்த ஆந் திரா அய்யப்ப பக்தர்கள் கூச்சலிட்டனர்.
உடனே தகவல் அறிந்த மாநகர காவல் உதவி ஆணையர் நிவேதா லட்சுமி, ஆய் வாளர் அரங்க நாதன் உள்ளிட்டோர் கோவி லுக்குச் சென்று போராட்டத்தில் ஈடுபட்ட ஆந்திர பக்தர்களை அமைதிப்படுத்தி அழைத்து சென்றனர்.
இது குறித்து கோவில் காவலாளி பரத் உள்பட 3 பேர் மீது சிறீரங்கம் காவல் நிலையத்தில் அய்யப்ப பக்தர்கள் புகார் கொடுத்துள்ளனர். அதே போல கோவில் காவலாளிகள் தரப்பிலும், அய்யப்ப பக்தர் கள் மீது புகார் கொடுக்கப்பட்டுள்ளது. கோவிலுக்குள்ளே பக்தர் ரத்தம் சிந்தியதால் சிறிது நேரம் கோவில் நடை சாத்தப்பட்டு, பரிகார பூஜைகள் நடத்தப்பட்ட பின்னர் கோவில் நடை திறக்கப்பட்டது.
இந்த மோதல் தொடர்பாக சிறீரங்கம் கோவில் நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது. அதில், ஆந்திராவை சேர்ந்த 34 பக்தர்கள் காயத்ரி மண்டப உண்டியலைத் தட்டி அதிக சத்தம் எழுப்பினர். தட்டிக் கேட்ட காவலாளி களையும், காவலரையும் ‘போலீஸ் டவுன் டவுன்’ என்று முழக்கம் எழுப்பினர். இதனால் காவல் நிலையத்தில் புகார் செய் தோம் என்று கூறப்பட்டுள்ளது.