பெங்களூரு, அக். 25 – கருநாடக மாநிலத் தில் அனைத்து வகையான தேர்வுகளிலும் இசுலாமிய மாணவிகள் ஹிஜாப் அணிந்து தேர்வு எழுத அனுமதி வழங்கப்பட்டுள் ளதாக, அம்மாநில கல்வித்துறை அமைச்சர் சுதாகர் தெரிவித்துள்ளார்.
கருநாடகாவில், முதலமைச்சர் சித்தரா மையா தலைமையில், ஆலோசனைக் கூட் டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய கருநாடக கல்வித்துறை அமைச்சர் சுதாகர், கருநாடக மாநிலத்தில் பள்ளி, கல்லூரி தேர்வுகளில் மட்டுமின்றி அனைத்து போட்டித் தேர்வுக ளிலும் மாணவிகள் ஹிஜாப் அணிந்து தேர்வு எழுத அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
ஏற்கெனவே மாணவிகள் ஹிஜாப் அணிந்து நீட் தேர்வு எழுத ஒன்றிய அரசு அனுமதி வழங்கியுள்ளது என்றும், எனவே, காங்கிரஸ் அரசு எடுத்துள்ள முடிவு எந்த விதத்திலும் தவறு கிடையாது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
ஹிஜாப்புக்கு அனுமதி வழங்கப்பட்ட நிலையில், இதனை கண்டித்து மாநிலம் முழுவதும் போராட் டத்தில் ஈடுபட உள்ளதாக ஹிந்துத்துவா அமைப்புகள் தெரிவித்துள்ளன.