ஜெய்ப்பூர், நவ.25 ராஜஸ்தான் சட்டமன்ற தேர்தலையொட்டி, மாநிலத்தில் உள்ள 199 தொகுதிகளிலும் இன்று (25.11.2023) காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கி தொடர்ந்து நடந்து வருகிறது.
காலையிலேயே பொதுமக்கள் வாக்குச் சாவடிக்கு வருகை தந்து வரிசையாக நின்று தங்களது வாக்குகளை செலுத்தி வருகின் றனர். இதையொட்டி அங்கு பலத்த பாது காப்பு போடப்பட்டுள்ளது.
ஒன்றிய அமைச்சர் கைலாஷ் சவுத்ரி பார்மரில் உள்ள பேட்டு வாக்குச் சாவடியில் வாக்களித்தார். பிகானேர் கிழக்கு சட்ட மன்றத் தொகுதியின் கிசாமிதேசரில் வாக் களிக்கும் முன், ஒன்றிய அமைச்சர் அர் ஜுன் ராம் மேக்வால், “அனைத்து வாக் காளர்களுக்கும் வாக்களிக்குமாறு வேண்டு கோள் விடுத்துள்ளேன் ராஜஸ்தானில் பாஜக ஆட்சி அமைக்கப் போகிறது” என்று கூறினார்.
அதுபோல வாக்களித்த ராஜஸ்தான் அமைச்சரும் காங்கிரஸ் தலைவருமான மகேந்திரஜீத் மால்வியா கூறுகையில், “பாகிடோராவில் இது ஒருதலைப்பட்சமான தேர்தல். நான்காவது முறையாக போட்யி டுகிறேன், இந்த முறை நான்கு அடிப்பேன் என்று உறுதியாக நம்புகிறேன்” என்றார்.
நாடு முழுவதும் 5 மாநில சட்டமன்ற தேர்தல் அறிவிக்கப்பட்டு வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. ஏற்கனவே மிசோ ரம், மத்தியப் பிரதேசம் மற்றும் சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களில் வாக்குப்பதிவு நடந்து முடிந்துள்ளது. அதைத்தொடர்ந்து, இன்று (25.11.2023) ராஜஸ்தான் மாநிலத்தில் வாக் குப்பதிவு நடைபெற்று வருகிறது. வரும் 30 ஆம் தேதி தெலங்கானா மாநிலத்தில் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்த 5 தொகுதிகளின் வாக்கு எண்ணிக்கை டிசம்பர் 3 ஆம் தேதி நடைபெற உள்ளது.
இந்நிலையில், ராஜஸ்தான் மாநிலத்தில் மொத்தமுள்ள 200 சட்டமன்ற தொகுதி களில், 199 தொகுதிகளுக்கு இன்று (25.11.2023) ஒரே கட்டமாக வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது. சிறீ கங்காநகரின் கரன்பூர் தொகுதியில் காங் கிரஸ் வேட்பாளரும், சட்டமன்ற உறுப்பி னருமான குர்மீத் சிங் கூனார் மரணமடைந் ததால், இந்தத் தொகுதியில் தேர்தல் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
இன்று (25.11.2023) வாக்குப்பதிவு நடை பெறும் 199 தொகுதிகளில் 1862 வேட் பாளர்கள் களமிறங்கி உள்ளனர். இந்த தேர்தலில், 5 கோடியே 25 லட்சத்து 38 ஆயிரத்து 105 வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர். இதில் இளம்வயது வாக்காளர்கள் 1,70,99,334 பேரும், 18 முதல் 19 வயதுக் குட்பட்ட 22,61,008 புதிய வாக்காளர்களும் அடங்குவர். இவர்கள் யாருக்கு வாக்களிக் கப்போகிறார்கள் என்பதை பொறுத்தே வெற்றி தோல்வி முடிவு செய்யப்படும் என தெரிகிறது. பொதுமக்கள் எளிதில் வாக் களிக்கும் வகையில், 36,101 இடங்களில் வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. அதில், நகர்ப்புறங்களில் 10,501 வாக்குச் சாவடிகளும், கிராமப்புறங்களில் 25 ஆயி ரத்திற்கும் அதிகமான வாக்குச்சாவடிகளும் அமைக்கப்பட்டுள்ளன. மாநிலம் முழு வதும், 65,277 வாக்குப்பதிவு அலகுகள், 62,372 கட்டுப்பாட்டு அலகுகள், இருப்புக் கள் உட்பட 67,580 விவிபிஏடி இயந்திரங்கள் வாக்குப்பதிவு பணிக்காக பயன்படுத்தப் படுகின்றன. அமைதியான வாக்குப்பதிவை உறுதி செய்வதற்காக 1,02,290 பேர் பாது காப்புப் பணியில் ஈடு படுத்தப்பட்டுள்ளனர்.
தேர்தல் ஆணையம் பகல் 12 மணிக்கு வெளியிட்டுள்ள அறிக்கையின் படி 27.10 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது என்று கூறியுள்ளனர். இதுவரை எந்தத் தொகுதி யிலும் வன்முறை இன்றி அமைதியாக வாக் குப்பதிவு நடந்துள்ளது என்று கூறியுள்ளனர்.