பக்தி வந்தால் புத்தி போகும் – ஆந்திராவில் தடியடி திருவிழாவாம் : மூன்று பக்தர்கள் பலி! நூற்றுக்கும் மேற்பட்டோர் படுகாயம்

2 Min Read

இந்தியா, மற்றவை

அய்தராபாத், அக். 26 – ஆந்திர மாநிலம், கர்னூல் மாவட்டம் ஆலூரில் இருந்து 15 கி.மீ. தொலை வில் தேவார கட்டா என்ற மலை கிராமம் உள்ளது. ஆந்திரா மற்றும் கருநாடகா மாநில எல்லையில் ஆன்மிக தலமாக இது விளங்கு கிறது. இங்கு புகழ்பெற்ற மல்லேஸ் வர சாமி கோவில் உள்ளது. மல்லேஸ்வர சாமிக்கு ஆண்டு தோறும் விஜயதசமி அன்று தடியடி திருவிழா நடைபெறுவது வழக்கம். திருவிழாவில் பல்வேறு கிராமங்களை சேர்ந்த பக்தர்கள் கலந்துகொள்வார்கள். அப்போது மல்லேஸ்வரசாமி உற்சவர் சிலையை தங்களது ஊருக்கு கொண்டு செல்வ தற்காக 2 தரப்பினராக பிரிந்து கட்டைகளால் தாக்கிக் கொள்வது வழக்கம். இதனால் ஆண்டுதோறும் நடைபெறும் தாக்குதலில் பலர் உயிர் இழப்பதும், ஆயிரக்கணக்கா னோர் காயம் அடைவதும் நடந்து வருகிறது.

இந்நிலையில் நேற்று முன்தினம் (24.10.2023) இரவு சாமி உற்சவம் தொடங்கியது. விழாவில் பல கிரா மங்களை சேர்ந்த ஆயிரக்கணக் கான பக்தர்கள் கலந்து கொண்ட னர். அப்போது சாமிக்கு மஞ்சள் பொடி தூவியும், பக்திப் பாடல் களை பாடியபடி சாமிக்கு கல் யாண பூசை நடைபெற்றது. இதையடுத்து மல்லேஸ்வர சாமி உற்சவரை மலையில் இருந்து மலையடி வாரத்துக்கு கொண்டு வந்தனர். அப்போது மலை அடிவாரத்தில் பல்வேறு கிராமங்களை சேர்ந்த பக்தர்கள் குவிந்து இருந்தனர்.

கல்யாண உற்சவம் முடிவ டைந்த பின்னர், உற்சவ மூர்த்தி சிலைகளை கைப்பற்றுவதற்காக அந்த பகுதியைச் சேர்ந்த 23 கிரா மங்களை சேர்ந்த மக்கள் 2 குழுக் களாக பிரிந்து, நள்ளிரவில் தங்களுக்குள் தடியடி நடத்தி மோதி கொள்வது வழக்கம். இதில் வெற்றி பெறும் குழுவை சேர்ந்தவர் கள் உற்சவ மூர்த்தி சிலையை எடுத்து செல்வார்கள். அதன்படி மல்லீஸ்வரர் கோவிலில் கல்யாண உற்சவத்தைத் தொடர்ந்து, நள் ளிரவு 12 மணிக்கு தடியடி திருவிழா நடைபெற்றது.

அதில் ஆயிரக்கணக்கான மக் கள், 2 குழுக்களாக பிரிந்து கைக ளில் தீவட்டி, தடி ஆகியவற்றை ஏந்தியபடி ஒருவரை ஒருவர் தடி யால் தாக்கிக் கொண்டனர். இதில் நூற்றுக்கணக்கானோர் காயம் அடைந்தனர். 3 பேர் உயிரிழந்தனர். காயம் அடைந்தவர்கள் அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச் சைக்காக அனுமதிக்கப்பட்டனர். 

100 ஆண்டுகளுக்கும் மேலாக நடைபெற்று வரும் இந்த தடியடி உற்சவத்தை தடுத்து நிறுத்த அதி காரிகள் முயற்சி மேற்கொண்டு வருகின்றனர். எனினும், ஊர் மக்கள் ஏற்க மறுத்து உற்சவத்தை நடத்தி வருவதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

இதனிடையே வெற்றி பெற்ற ஒரு தரப்பினர் மல்லேஸ்வர சாமியின் சிலையை தங்களது சொந்த ஊருக்கு கொண்டு சென் றனர். சாமி சிலையை கொண்டு சென்றவர்கள் அடுத்த ஆண்டு விஜயதசமி அன்று மீண்டும் ஒப்படைக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *