சென்னை,அக்.26 – தமிழ் நாட்டில் செயல்படும் தட்டச்சு மற்றும் சுருக் கெழுத்து பயிற்சிக்கான பாடத் திட்டம் 15 ஆண்டுகளுக்கு பின் மாற்றப்பட்டு உள்ளது.
புதிய பாடத்திட்டம், வரும் பிப்ரவரியில் அமலுக்கு வர உள்ளது.
இதன்படி, ஏழாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர் கள், தட்டச்சு பயிற்சியில் சேர நுழைவுத் தேர்வு எழுத வேண்டும். எட் டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால், நேரடி யாக இளநிலை படிப்பில் சேரலாம்; நுழைவு தேர்வு தேவையில்லை.
தட்டச்சு ஆங்கில பிரிவில், இளநிலை தேர்ச்சி பெற்றால் மட்டுமே, அடுத்த நிலை தேர்வு எழுத முடியும் என, புதிய பாடத்திட்ட முறையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.