செய்திச் சுருக்கம்

viduthalai
1 Min Read

மழை நீடிக்கும்
தென்கிழக்கு அரபிக் கடல் மற்றும் அதை ஒட்டிய மாலத்தீவு பகுதிகளில் ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. அதன் காரணமாக தமிழ்நாட்டின் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யும் வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மய்யம் தகவல்.
நகல்களை…
புயல், வெள்ள பாதிப்பினால் கல்லூரி சான்றிதழ்களை இழந்த மாணவர்களுக்கு கட்டணமின்றி அவற்றின் நகல்களைப் பெற இணையதளம் உருவாக்கப்பட்டுள்ளது.
இறுதி பட்டியல்
தமிழ்நாட்டில் வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகள் கடந்த அக்டோபர் 27ஆம் தேதி தொடங்கி கடந்த 9ஆம் தேதியுடன் முடிவடைந்துள்ளது. இறுதி வாக்காளர் பட்டியல் வரும் ஜனவரி 5ஆம் தேதி வெளியிடப்படவுள்ளது.
வெளியீடு
குரூப் 4 தேர்வில் இறுதியாகத் தேர்வானோரின் விவரம் தரவரிசையுடன் விரைவில் வெளியிடப்படும் என மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் தகவல்.
பதிலளிக்க உத்தரவு
சிறைவாசிகளை முன்கூட்டியே விடுதலை செய்யும் விவகாரம் தொடர்பாக எப்போதுதான் முடிவெடுக்கப் படும்? என்று தமிழ்நாடு ஆளுநருக்கு சரமாரி கேள்வி எழுப்பிய உச்சநிதிமன்றம், இந்த விவகாரத்தில் பிப்ரவரி 2ஆம் தேதிக்குள் பதிலளிக்க ஆளுநர் தரப்புக்கு உத்தரவிட்டுள்ளது.
பாராட்டு
வடசென்னையில் குட்கா, கஞ்சாவுக்கு எதிராக காவல்துறையினர் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இதனால் ஒரே மாதத்தில் 315 பேர் கைது செய்யப்பட்டுள்ளதோடு, 170 பேரின் வங்கிக் கணக்கு முடக்கப்பட்டுள்ளது. காவல்துறையின் நடவடிக்கைக்கு ஆசிரியர்கள், பொதுமக்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.
அதிகாரிகளுக்கு…
இலங்கையிலிருந்து தமிழ்நாட்டிற்கு வந்த அகதிகளுக்கு, அரசு ஒதுக்கிய நிதியை முறைகேடு செய்த வழக்கில், 4 அரசு அதிகாரிகளுக்கு 2 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து குற்றவியல் நீதிமன்றம் உத்தரவு.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *