‘மிக்ஜாம்’ புயல் மழையால் பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு ரூ.17.60 கோடி நிவாரண பொருள் விநியோகம் தமிழ்நாடு அரசு அறிவிப்பு

1 Min Read
வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

சென்னை, டிச.12- தமிழ் நாடு அரசு நேற்று (11.12.2023) வெளியிட்டுள்ள அறிக்கை:

பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உட் பட்ட பகுதிகளில் மிக் ஜாம் புயல் மற்றும் மழையினால் பாதிப்புகள் ஏற் பட்ட பகுதிகளில் உள்ள பொதுமக் களுக்கு உதவு வதற்கான ஒருங்கிணைந்த  கட்டுப்பாட்டு அறை ரிப்பன் கட்டிடத் தில் உள்ள மாநகராட்சி அலுவலகத்தில் கடந்த 6.12.2023 முதல் இயங்கி வருகிறது.
பல்வேறு மாவட்ட நிர்வாகங்களின் வாயி லாக பெறப்படும் நிவா ராண பொருட்கள் வெள்ளத்தால் அதிக பாதிப்பு ஏற்பட்ட பகுதி களுக்கு, தேவைக்கேற்ப ஒதுக்கீடு செய்யப்பட்டு சம்பந்தப்பட்ட மாநக ராட்சி மற்றும் மாவட்ட அலுவலகங்கள் மூலமாக விநி யோகிக்கப்பட்டு வருகிறது.

இதுவரை 10,77,000 குடி நீர் பாட்டில்கள், 3,02,165 பிரெட் பாக்கெட்டுகள், 13,08,847 பிஸ்கட் பாக் கெட்டுகள், 73.4 டன் பால் பவுடர், 4,35,000 கிலோ அரிசி, 23,220 கிலோ உளுந்து மற்றும் சமையலுக்கு தேவை யான பொருட்கள் பெறப் பட்டுள்ளன.

மேலும் 82,400 பெட் ஷீட்டுகள் மற்றும் லுங் கிகள், நைட்டிகள், பிளாஸ் டிக் பக்கெட்டுகள், குவ ளைகள், மெழுகுவர்த் திகள், தீப் பெட்டிகள் என ரூ.17.60 கோடி மதிப் பிலான நிவாரண பொருட்கள் 34 மாவட்டங்களில் இருந்து பெறப்பட்டு, சென்னை மாநகராட் சிக்குட்பட்ட 15 மண்ட லங்கள், செங்கல்பட்டு மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் பாதிக் கப்பட்ட பகுதிகள், ஆவடி மற்றும் தாம்பரம் மாநகராட்சிகள், குன்றத் தூர் நகராட்சி ஆகிய பகுதிகளில் பாதிக்கப் பட்ட மக்களுக்கு வழங்கப்பட் டுள்ளது.
தன்னார்வ தொண்டு நிறுவ னங்கள், நிவாரண பொருட்கள் வழங்க ஏதுவாக பிரத்யேகமாக அறிவிக்கப்பட்ட வாட்ஸ்அப் எண் மூலம் தோராயமாக ரூ.50 லட் சம் மதிப்பிலான நிவா ரண

பொருட்கள் பெறப் பட்டு அவையும் தேவை யான பகுதிகளுக்கு வழங் கப்பட்டு வருகிறது.
இவ்வாறு அதில் கூறப் பட்டுள்ளது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *