வெள்ளைக்காரர்கள் வருகிற வரை நமக்கு கல்வி கிடையாது. சேரன் காலத்திலும் கிடையாது; பாண்டியன் காலத்திலும் கிடையாது; சோழன் காலத்திலும் கிடையாது. நம்முடைய மன்னர்கள் பார்ப்பன குருமார்கள் சொல்வதைக் கேட்டு நடந்தார்கள். பார்ப்பனர்கள் வெள்ளைக்காரர்களை எதிர்த்தார்கள். வெள்ளைக்காரர்கள் எல்லோரையும் படிக்கச் சொல்கிறார்கள்; ஜாதியை அழிக்கிறார்கள் என் பதும் ஒரு முக்கியக் காரணம்.
அதன் தொடர்ச்சியாக பார்ப்பனர்கள் எப்பொழுதெல் லாம் ஆட்சி அதிகாரத்திற்கு வருகிறார்களோ, அப்போதெல் லாம் நமக்கான கல்வி வாய்ப்பைத் தடுக்கிறார்கள். அப்படித் தான் ஆச்சாரியார் முதலில் ஆட்சிக்கு வந்தபோது பள்ளிக் கூடங்களை மூடினார்.
1953 இல் மறுபடியும் ஆட்சிக்கு வந்தபோது குலக்கல்வித் திட்டத்தைக் கொண்டு வந்தார். ஆக, தாழ்த்தப்பட்ட பிற்படுத்தப்பட்ட மக்கள் படித்தால், வேலைக்கு வந்தால் விழிப்புணர்வு பெற்றுவிடுவார்கள். அதனால் தங்களின் ஆதிக்கத்திற்கு ஆபத்து என்று அஞ்சி, இந்த மோசமான திட்டத்தை ஆச்சாரியார் கொண்டு வந்தார். இதைத்தான் இப்போதிருக்கும் மோடி ஆட்சி, ”விஸ்வகர்மா யோஜனா” என்ற பெயரில் அதே திட்டத்தைக் கொண்டு வந்திருக்கிறது.
அப்பா செய்கிற தொழிலை மகன் செய்ய வேண்டும். அதற்காக ஒன்றிய அரசாங்கம் கடன் தருகிறது என்பது இதில் கூடுதல் அம்சம்.
இதை திராவிடர் கழகம் எப்படிப் பார்க்கிறது? இது விஸ்வகர்மா யோஜனா அல்ல; இது மனுதர்ம யோஜனா என்பதுதான் எங்களின் பார்வை!
வெளிநாடுகளில் எல்லோரும் எல்லா தொழிலையும் செய்யலாம். ஆனால், இந்த மனுதர்ம யோஜனா திட்டம் என்பது பரம்பரைத் தொழிலைத்தான் செய்ய வேண்டும். அதுவும் குறிப்பிட்ட 18 ஜாதித் தொழில்கள்; 18 வயது இதற்கான தகுதி என்று வரையறுத்திருக்கிறார்கள்.
தந்தை பெரியார், அண்ணல் அம் பேத்கர், அறிஞர் அண்ணா, முத்தமி ழறிஞர் கலைஞர் ஆகியோர் கொண்டு வந்த திட்டங்களை தடுக் கத்தான் இப் போதிருக்கும் ஒன் றிய அரசு முயற்சிக் கிறது. அதிலொரு பகுதிதான் இந்த மனுதர்ம யோஜனா.
ஆகவே, இது பேராபத்து; கல் லூரிக்குப் போகிற நமது பிள்ளைகளை வஞ்சிக்கும் பார்ப்பன சூழ்ச்சி; இது ஆரியத்தின் நயவஞ்சகம்; ஜாதியின் பேரால் நம்மை ஒடுக்குகிறார்கள்.
இப்படிப்பட்ட நாசகார ஆட்சியை முறியடிக்கத்தான், தமிழ்நாடு அரசால் “தகைசால் தமிழர் விருது” பெற்ற தமிழர் தலைவர்; பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியாருக்கு பிறகு மக்களுக்காக உழைத்துக் கொண்டிருக்கிறார்கள். எப்படிப் பட்ட தலைவர் ஆசிரியர், “திராவிடர் கழகம் கலைஞருக்கு மட்டும் தாய்வீடு அல்ல; எனக்கும் தாய்வீடு திராவிடர் கழகம்தான். ஆசிரியர்தான் என் வழிகாட்டி” என்று பறைசாற்றினார் தமிழ்நாடு முதலமைச்சர். அப்படிப் பட்ட தமிழர் தலைவர் வரலாற்றுச் சிறப்புமிக்க இந்த அவுரித்திடலில் பிரச்சாரத்தை தொடங்க வந்திருக்கிறார்கள். அவரது உரையைக் கேட்டு, விஸ்வகர்மா எனும் மனுதர்ம யோஜனாவைக் கொண்டு வருகிற பா.ஜ.க. ஆட்சியை வீட்டுக்கு அனுப்புங்கள்.
(பொதுச்செயலாளர் முனைவர் துரை. சந்திரசேகரன், நாகப்பட்டினம் அவுரித்திடலில், 25.10.2023)