புதுடில்லி, டிச.11- ஆதாரில் திருத்தங்களை வருகிற டிசம்பர் 14ஆம் தேதி வரை மட்டுமே இலவசமாக மேற்கொள்ள முடியும். அதன் பின்னர் இலவச சேவை நிறுத்தப்பட உள்ளது.
ஆதார் அட்டை மூலம் நடைபெறும் மோசடிகளை தடுக்கும் வகையில் கடந்த 10 ஆண்டுகளில் ஆதார் விவரங்களை புதுப்பிக்காதவர்கள் அதனைக் கட்டாய மாக புதுப்பித்துக்கொள்ள வேண்டும் என ஒன்றிய அரசு அறிவித்திருந்தது. வருகிற டிசம்பர் 14ஆம் தேதி வரை இந்த சேவைகளை இலவசமாகவே செய்து கொள்ளலாம். ஆனால் அதன் பின்னர் இந்த சேவை களுக்கு கட்டணங்கள் செலுத்த வேண்டியிருக்கும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
ஆதார் அட்டையில் பெயர் தவறாக இருந்தால் அல்லது வேறு விவரங்கள் தவறாக இருந்தால் இணையம் மூலம் அதை எளிதாக மாற்ற முடியும். இதற்கான வசதிகளை ஆதார் அமைப்பு ஏற்படுத்தி கொடுத்து உள்ளது. ஹிமிஞிகிமி ஏற்படுத்தி கொடுத்துள்ள வசதிகள் மூலம் எளிதாக இந்த விவரங்களை மாற்ற முடியும்.
நவம்பர் 14ஆம் தேதி வரை இந்த மாற்றங்களைச் செய்ய கட்டணம் இல்லை. இணையம் மூலம் எளிதாக செய்ய முடியும். நேரில் ஆதார் மய்யத்தில் செய்வதற்கு மட்டும் 50 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படும்.
மேலும் myAadhaar பக்கம் மூலம் எளிதாக முகவரியை மாற்றும் வசதி இருந்தது. ஆனால் தற்போது அந்த அவகாசம் நிறைவிற்கு வர உள்ளது. நேற்றோடு இந்த அவகாசம் முடிந்த நிலையில் இனி முகவரியை மாற்ற கட்டணம் செலுத்த வேண்டும்.
இச்சேவையை நேரிடையாக பெற இப்போதும் கட்டணம் உள்ளது. ஆனால் இதுவரை இணையம் வழியாக இலவசமாக பெற முடிந்தது. ஆனால், இச்சேவை இனி இலவசம் கிடையாது. இனி கட்டணம் விதிக்கப்பட உள்ளது. இதை பெற இன்னும் 4 நாள்கள் மட்டுமே உள்ளது.