“சமூக வலைதளங்களின் வளர்ச்சியால் உலகம் முழுவதும் வெறுப்புணர்வு அதிகரித்திருக்கிறது” உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட்

2 Min Read

மும்பை, டிச. 11- சமூக வலை தளங்களின் வளர்ச்சி யால் சகிப்புத்தன்மையற்ற சமூகம் உருவாகி, உலகம் முழுவதும் வெறுப்பு ணர்வு அதிகரித்திருப்ப தாக உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி ஒய் சந்திரசூட் கருத்து தெரிவித்திருக்கிறார்.

மும்பையில் நடைபெற்ற ஜம்னாலால் பஜாஜ் விருது வழங்கும் விழாவில் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் கலந்து கொண் டார். சுதந்திரத்திற்குப் பிறகான இந்தியாவின் பயணம் மிக தனித்துவமா னது என்பது குறித்து விவரித்த அவர், “சமீப காலமாக உலகம் முழுவ தும் பிரிவினைவாதமும், வெறுப்புணர்வும் காட்டுத்தீயைப் போல பரவி வருகிறது. சமூக வலைதளங்களின் வளர்ச் சியால் சகிப்புத்தன்மை யற்ற சமூகம் உருவாகி, உலகம் முழுவதும் பிரிவினை அதிகரித்திருக்கிறது.

உலகம் முழுவதும் வலது, இடது, மய்யம் என பிரிந்துகிடக்கிறது. இதில் வெறுப்புணர்வும், பிரிவினைவாத கருத்து களும் பரவி வருகிறது. இதே நிலை இந்தியாவி லும் விதிவிலக்கல்லாமல் தொடர்கிறது. சமூக வலைத்தளங்களின் வளர்ச்சி. கருத்துகளை ஆராய்ந்து அறியாமல் மேலோட்டமாக பார்க் கும் இளைஞர்களின் மனப்பான்மை, மற்றும் சமூகங்களுக்கிடையே சகிப்புத்தன்மை யற்ற துமே முக்கிய காரணம். மேலும் இது சரிவர தொழில்நுட்பத்தை பயன்படுத்த தவறியதன் விளைவு.

இந்தியாவுடன், பல நாடுகள் 75 ஆண்டுக ளுக்கு முன்பு காலனித்துவ ஆட்சியிலிருந்து சுதந்தி ரம் பெற்றன. ஆனால் அவற்றில் பல நாடுகள் உண்மையான தன்னாட் சியை (self governance) நிலைநிறுத்த முடிய வில்லை, அதே நேரத்தில் இந்தியாவால் அதன் ஜனநாயகத்தை நிலை நிறுத்த முடிந்தது. மற்ற நாடுகளுடன் ஒப்பிடுக ளில் இந்தியா தன்னாட்சி மற்றும் ஜனநாயகத்தை பேணிக்காப்பதில் மேன் மையுடன் செயல்படுகி றது. இதற்கு காரணம், இந்தியா பிற நாடுகளைப் போல் அல்லாமல் ஜன நாயக கோட்பாடுகளை முழுமையாக உள்வாங்கி யது மற்றும் அனைவ ருக்குமான அரசமைப்பு சட்டத்தை உருவாக்கியதே என சிலர் கூறுகின்றனர்.

பலதரப்பட்ட கலாச் சாரங்களை பின்பற்றுப வர்களையும் தாய் உள் ளத்தோடு அணைத்துக் கொண்டதுதான் இதற்கு காரணம் என மற்றும் சிலரும் கூறலாம். பல தரப்பட்ட கலாச்சாரம் மற்றும் அதை புரிந்து கொண்டு கருத்துகளை தெரிவிக்கும் தன்மை இந் தியாவை மற்ற ஜனநாயக நாடுகளில் இருந்து வேறு படுத்தி காட்டுகிறது. ஒரு சிறந்த சமுதாயத்தை அமைக்க முழு மனதோடு பொது சேவை செய்யும் தன்னார்வலர்களால் தான் முடியும். அந்தப் பாதையை தேர்வு செய்ய தொழில்முறை மற்றும் தனிப்பட்ட வாழ்வுகளில் பல சவால்களை எதிர் கொள்ள வேண்டியுள் ளது. அதை ஒரு சிலரால் மட்டுமே கடக்க முடியும், அதோடு முழு மனதோடு பொது சேவையிலும் ஈடு படவும் முடியும்.
நீதிபதிகள் பல நேரங் களில் அநீதிகளை நேருக்கு நேர் எதிர்கொள்கிறார் கள். அவற்றை சட்டத்தின் வழியில் தீர்வு கண்டு, சிறந்த சமுதாயத்தை உரு வாக்க ஒவ்வொரு முறை யும் முயலும் போது, பல தடைகளை எதிர் கொள்ள வேண்டியுள் ளது” என்றார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *