மும்பை, டிச. 9- நடப்பு மாதத்துக்கான நிதிக்கொள்கை கூட் டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து, ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்தி காந்ததாஸ் நேற்று (8.12.2023) அறிவித்தார். வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி வழங்கும் குறுகிய கால கடன்களுக்கான ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றம் செய்யப்படவில்லை. இது 6.5 சதவீதமாக நீடிக்கிறது. இதனால், கடன் தவணை வட்டியில் மாற்றம் இருக்காது.
மருத்துவமனைகள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு மொபைல் மூலம் மேற்கொள்ளப்படும் யுபிஅய் பரிவர்த்தனை உச்சவரம்பை ரூ.1 லட்சத்தில் இருந்து ரூ.5 லட்சமாக உயர்த்த முடிவு செய்யப்பட்டுள்ளது. நடப்பு நிதியாண்டில் நாட்டின் பொரு ளாதார வளர்ச்சி 7 சதவீதமாக இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. இது முன்பு 6.5 சதவீதமாக இருக்கும் என கணிக்கப்பட்டிருந்தது. பண வீக்கம் 5.4 சதவீதமாக இருக்கும்.
குறுகியகால கடன்களுக்கான வட்டி விகிதத்தில் மாற்றமில்லை: ரிசர்வ் வங்கி அறிவிப்பு
Leave a Comment