முடிவுகள் வந்து 4 நாட்கள் ஆகியும் 3 மாநில முதலமைச்சர்கள் குறித்து முடிவெடுக்காமல் திணறும் பா.ஜ.க.!

2 Min Read
வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

புதுடில்லி, டிச.8 ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர் மாநில சட்டமன்ற தேர்தல் முடிவுகள் வெளியாகி 4 நாட் களாகிவிட்ட நிலையில் இம்மாநிலங் களில் முதலமைச்சர்கள் யார் என முடிவெடுக்க முடியாமல் பாஜக தத் தளித்து வருகிறது.
தெலங்கானா, சத்தீஸ்கர், ம.பி, ராஜஸ்தான் மற்றும் மிசோரம் மாநிலங்களில் சட்டசபை தேர்தல்கள் நடைபெற்றன. தெலங்கானாவில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றது. அம்மாநில காங்கிரஸ் கமிட்டித் தலைவர் ரேவந்த் ரெட்டி நேற்று (7.12.2023) முதலமைச்சராகப் பதவி யேற்றுக் கொண்டார். மிசோரம் மாநிலத்தில் ஜோரம் மக்கள் இயக்கம் வெற்றி பெற்றுள்ளது. மிசோரம் முதலமைச்சராக லால்துஹோமா நாளை பதவியேற்க உள்ளார்.
சத்தீஸ்கர், ராஜஸ்தான் மற்றும் மத்தியப் பிரதேச மாநிலங்களில் பாஜக வென்றுள்ளது. ஆனால் இந்த 3 மாநிலங்களின் முதலமைச்சர் பதவிக்கு கடும் போட்டி இருப்பதால் பாஜக மேலிடம் முடிவெடுக்க முடியாமல் தத்தளித்து வருகிறது.

ராஜஸ்தான்: ராஜஸ்தான் மாநிலத் தில் மேனாள் முதலமைச்சர் வசுந்தர ராஜே சிந்தியா தமக்குதான் முதல மைச்சர் பதவி தர வேண்டும் என்பதில் உறுதியாக நிற்கிறார். அவருக்கு ஆதர வாக 25 சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளனர். ஆனால் பாஜக மேலிடமோ புதுமுகம் ஒருவரை முதலமைச்சராக்க விரும்புகிறது. ராஜஸ்தான் முதலமைச் சர் பதவிக்கான போட்டியில் அர்ஜூன் ராம் மேக்வல், தியாகுமாரி, அஸ்வினி வைஷ்ணவ், கஜேந்திர சிங் ஷெகாவத், சிபி ஜோஷி, பாபா பாலக்நாத் ஆகியோரும் உள்ளனர். அதே நேரத் தில் மக்களவைத் தலைவர் ஓம் பிர் லாவை ராஜஸ்தான் மாநில முதலமைச் சராக்கவும் பாஜக மேலிடம் பரிசீலனை செய்து வருவதாகவும் கூறப்படுகிறது.

மத்தியப் பிரதேசம்: மத்தியப் பிரதேசத்தில் முதலமைச்சர் சிவராஜ் சிங் இம்முறையும் தம்மையே முதல மைச்சராக்க வேண்டும் என வலியுறுத் துகிறார். ஆனால் பாஜக மேலிடமோ வேறு ஒருவரை முதலமைச்சராக்க முனைகிறது. இது தொடர்பாக டில்லியில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டங்களுக்கு போக முடியாது என மறுத்தார் சிவராஜ் சிங் சவுகான். ம.பி. மாநில முதலமைச்சர் பதவிக்கான ரேசில், சட்டமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து விலகினார் நரேந்திர சிங் தோமர் மற்றும் பிரகலாத் சிங் பட்டேல் ஆகியோர் முன்னணியில் உள்ளனர்.

சத்தீஸ்கர்: பாஜக வெற்றி பெற்ற சத்தீஸ்கர் மாநிலத்திலும் புதுமுகம் ஒருவரையே முதலமைச்சராக்க பா.ஜ.க. முனைகிறது. சத்தீஸ்கர் மாநிலத்தில் மேனாள் முதலமைச்சர் ரமண் சிங், முதலமைச்சர் பதவிக்கான ரேசில் முதல் இடத்தில் உள்ளார். அதே நேரத்தில் அருண் சாவ், ரேணுகா சிங், விஷ்ணு தியோ சாய், ரவிச்சந்திர நேதம் ஆகியோரும் முதலமைச்சர் பதவிக்கான போட்டியில் இருந்து வருகின்றனர். சத்தீஸ்கர், ராஜஸ்தான், மத்தியப் பிர தேச மாநிலத்தின் புதிய முதலமைச் சர்கள் யார் என முடிவெடுக்க முடியா மல் பாஜக தத்தளித்து வருவதை எதிர்க் கட்சிகள் கடுமையாக விமர்சித்தும் வருகின்றன.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

TAGGED:
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *