டிச.6 ஆம் தேதி ‘இந்தியா’ கூட்டணி கட்சிகள் ஆலோசனை கூட்டம்: மல்லிகார்ஜூன கார்கே அழைப்பு

1 Min Read

புதுடில்லி, டிச.3 நான்கு மாநில தேர்தல் முடிவுகள் காங்கிரஸ் கட் சிக்குப் பின்னடைவை ஏற்படுத்தி உள்ளது. ராஜஸ்தானில் அந்தக் கட்சி ஆட்சியை இழந்தது. மத்தியப் பிரதேசத்தில் பாரதீய ஜனதாவுக்கு ஈடுகொடுக்க முடியாமையால் ஆட்சியைப் பிடிக்க முடிய வில்லை.

சத்தீஸ்கரில் தொடக்கத்தில் முன்னிலையில் இருந்து வந்த காங்கிரஸ் நேரம் செல்லச் செல்ல பின்தங்கியது. இதனால் அந்த மாநிலத்திலும் காங்கிரஸ் ஆட் சியை இழக்கிறது.தெலங்கானா வில் மட்டும் காங்கிரஸ் இமாலய வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்துள்ளது.

இந்நிலையில் 4 மாநில தேர்தல் முடிவுகள் தொடர்பாக ‘இந்தியா’ கூட்டணி கட்சித் தலைவர்களின் ஆலோசனைக் கூட்டம் புதுடில்லி யில் வருகிற 6 ஆம் தேதி (புதன் கிழமை) நடக்கிறது. 28 கட்சிகளைச் சேர்ந்த முக்கியப் பிரதிநிதிகள் இந்தக் கூட்டத்தில் கலந்துகொள்ள உள்ளனர்.

இந்தக் கூட்டம் தொடர்பாக கூட்டணி கட்சித் தலைவர்களுக்கு காங்கிரஸ் தலைவர் மல்லிகார் ஜூன கார்கே கடிதம் எழுதியுள் ளார். அவரது வீட்டில் மாலையில் இந்தக் கூட்டம் நடைபெறுகிறது.

இந்தக் கூட்டத்தில் நான்கு மாநில தேர்தல் முடிவுகள் தொடர் பாக விவாதிக்கப்படுகிறது. சட்ட மன்றத் தேர்தலில் கட்சிகள் தனி யாக போட்டியிட்டதால் பாதிப்பு ஏற்பட்டது. இதுகுறித்து முக்கிய மாக ஆலோசிக்கப்படுகிறது.

மேலும் நாடாளுமன்றத் தேர்தலில் பாரதீய ஜனதாவை எப்படி எதிர்கொள்வது? பிரதமர் வேட்பாளர், தொகுதி பங்கீடு உள்பட முக்கிய முடிவுகள் குறித்தும் இந்த கூட்டத்தில் விவாதிக்கப்படுகிறது. 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *